பிருத்விராஜ் புரொடக்ஷன்ஸ் & மேஜிக் பிரேம்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுப்ரியா மேனன் மற்றும் லிஸ்டன்ஸ் ஸ்டீபன் தயாரிப்பில், ராஜேஷ் முருகேசன் இசையில், பிரேமம் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில், நடிகர் பிரித்விராஜ், நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள மலையாள திரைப்படம் 'கோல்டு'.


ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் மாதமே வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த இந்த திரைப்படத்தின்  பணிகள் முழுமை அடையாத காரணத்தினால், டிசம்பருக்கு ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.


இந்த திரைப்படம் டிசம்பர் 1ம் தேதி தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டனர் படக்குழுவினர். இந்த நிலையில், இப்படத்தின் தமிழ் டப்பிங் ரிலீஸ் இன்று வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனினும் இப்படத்தின் மலையாள பதிப்பு, அறிவித்த படி இன்று வெளியாகியுள்ளது. 


7 வருட இடைவேளைக்கு பிறகு அல்போன்ஸ், இந்த படத்தில் வென்றாரா என்பதை தெரிந்து கொள்ள கோல்ட் திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை பார்க்கலாம்.






































கோல்ட் படத்தின் தமிழ் வர்ஷன் டிசம்பர் 2ம் தேதி(நாளை) வெளியாக உள்ளது. இந்நிலையில் தமிழ் ரசிகர்களின் பார்வையில் கோல்ட் திரைப்படம் எப்படி உள்ளது என்பதை சற்று காத்திருந்து காண்போம்.