பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இதுவரை வெறும் வாய் தகராறுதான் நடந்து வந்தது. ஆனால் இப்போது, போட்டியாளர்கள் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வாரத்தில்“பழங்குடியின மக்களும், ஏலியன்ஷன்ஸ்களும்” என்ற டாஸ்க் கொடுக்கப்பட்ட நிலையில், இந்த டாஸ்க், பிக்பாஸ் போட்டியாளர்களை சுறுசுறுப்பாக செயல்பட செய்திருக்கிறது.
அனைத்தும் நன்றாக சென்று கொண்டு இருந்த நிலையில், முதல் ப்ரோமோ வெளிவந்தது. அதில், கதிரவனுக்கும் அமுதவாணனுக்கும் ஏதோ சண்டை ஏற்பட்டதால், அவர்கள் இருவரும் அடித்துக்கொள்வது போன்ற காட்சி இடம்பெற்று இருக்கிறது. அவர்கள், அடித்துக்கொள்கிறார்களா அல்லது டாஸ்க்கை முறட்டுத்தனமாக விளையாடுகிறார்களா என்பது விளங்கவில்லை.
இவர்களுக்கு இடையே அசிம் மூக்கை நுழைந்து, கோபமாக இருக்கும் அமுதவாணனின் கழுத்து மீது கையை வைக்கிறார். பின், “என்ன அடி டா..தைரியம் இருந்த அடி டா .. “ என்று அமுதவாணனிடம், அசிம் கூறுகிறார்.
இதன்பிறகு பிக்பாஸ் வீட்டில் என்ன நடக்கிறது என்பதை விளக்கும்படியாக இரண்டாம் ப்ரோமோ அமைந்துள்ளது.அமுதவாணன் மீது கைவைத்த அசிமை, மைனா நந்தினி மற்றும் ஏடிகே ஆகியோர் மாற்றி மாற்றி ரவுண்டு கட்டி கேள்வி கேட்கின்றனர். இதனால், காலையில் இருந்து பிக்பாஸ் என்ற ஹாஸ்டாக் ட்விட்டரில் ட்ரெண்டாகவுள்ளது.
எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் :
இந்நிகழ்ச்சியின் முதல் வாரத்தில், ஜிபி முத்து அவராகவே வெளியேறினார். பின் அதே வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்ட சாந்தியை அடுத்து, இரண்டாம் வாரத்தில் அசல் கோலார் எலிமினேட் செய்யப்பட்டார். மூன்றாம் வாரத்தில் ஷெரினா ஷாம் வெளியேறினார். நான்காம் வாரத்தில் விஜே மகேஸ்வரி எலிமினேட் ஆனார். ஐந்தாம் வாரத்தில் நிவாஷினி வெளியேற கடந்த வாரத்தில் ராபர்ட் மாஸ்டர் வெளியேறினார்.
எஞ்சிய போட்டியாளர்கள் :
இவர்கள் சென்ற பின், திருநங்கை ஷிவின் கணேசன், சீரியல் நடிகர் முகமது அசிம், சீரியல் நடிகை ஆயிஷா, மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரச்சிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , அமுதவாணன், விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் மற்றும் மைனா நந்தினி என மொத்தம் 13 போட்டியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : Robert Master open talk: எனக்கும் ரச்சிதாவுக்கும் இடையே காதலா? முதன்முறையாக விளக்கம் கொடுத்த ராபர்ட் மாஸ்டர்!