கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பினை பெற்ற காடஸில்லா vs. காங்கிரசின் படத்தின் தொடர்ச்சியாக காட்ஸில்லா X காங் என்ற படம் வெளியாகவுள்ளது. 


காட்ஸில்லா X காங்:


மார்வல் யூனிவர்ஸ், டிசி யூனிவர்ஸ் அளவிற்கு பெரிய ரசிகர் பட்டாளம் இல்லை என்றாலும், சக்தி வாய்ந்த கதைகளை கொடுப்பதில் ‘மான்ஸ்டர்வர்ஸ்’ என்ற உலகமும் சளைத்தது இல்லை. அந்த மான்ஸ்ட்வர்ஸின் முக்கியமான படமாக பார்க்கப்படுவதுதான் காடஸில்லா X காங். ஊரே அஞ்சி நடுங்கிய கொடூர மிருகமாக காட்டப்படும் கிங் காங், இன்னொரு காெடூர மிருகமான காட்ஸில்லாவுடன் சண்டையிடுவதுதான் 2021ஆம் ஆண்டு வெளியான காட்ஸில்லா X காங் படத்தின் கதை.


சையின்ஸ் பிக்ஷன் கதையான இது, உலகம் முழுவதும் உள்ள ஹாலிவுட் ரசிகர்களை கவர்ந்தது. பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வசூலிலும் சக்கை போடு போட்டது. படத்தின் வி.எஃப்.எக்ஸ் மற்றும் ஆக்ஷன் காட்சிகள், ரசிகர்களிடையே தனி கவனம் ஈர்த்தது. படத்தில், மில்லி பாபி ப்ரவுன், ஜூலியன் டெனிசன், ரெபேக்கா ஹால் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இருந்ததால், படத்தின் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதிருந்த மதிப்பு கூடியது. இதையடுத்து, மான்ஸ்டர் வர்ஸின் ஆடுத்த படத்திற்கான டைட்டில் வெளியாகியுள்ளது. 


டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி வெளியீடு:


காட்ஸில்லா X காங் படத்தின் முடிவுக்கதைக்கான (Sequel) டைட்டில் வெளியாகியுள்ளது. 2021ஆம் ஆண்டு வெளியான காட்ஸில்லா X காங் படத்தை இயக்கிய ஆடம் வின்கார்ட் இந்த படத்தையும் இயக்கவுள்ளார். இதனை, லெஜன்டரி பிக்சர்ஸ் என்ற நிருவனம் தயாரிக்கவுள்ளது. புதிதாக உருவாகவுள்ள இந்த படத்திற்கு காட்ஸில்லா X காங் தி நியூ எம்பையர் என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் சிறிய டீசரும் டைட்டிலுடன் சேர்த்து வெளியானது.


அந்த டீசர் வீடியோவில், அரியணை மீது காங் அமர்ந்திருப்பது போலவும் காங்கை சுற்றி காட்ஸில்லாவின் எலும்பு கூடுகள் இருப்பது போலவும் க்ராஃபிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. இதனால், அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு இப்பொழுதே அதீத எதிர்பாரப்பு தோன்றி விட்டது. 




2021-ல் வெளியான படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களாக நடித்திருந்த ரெபேக்கா ஹால் மற்றும் ப்ரையன் டைரி இப்படத்திலும் நடிப்பார்கள் என கூறப்படுகிறது. மேலும், 2024ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி படம் வெளியாகும் எனவும் படக்குழு வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்:


காட்ஸில்லாXகாங் படத்தின் டைட்டிலிற்காகவும் அப்படம் குறித்த புதிய அப்டேட்டிற்காகவும் ரசிகர்கள் பலர் காத்துக்கொண்டிருந்தனர். ஆனால், பல நாட்களாகியும் படம் குறித்த அப்டேட்டுகள் எதுவும் வெளியிடப்படாமல் இருந்தன. இந்நிலையில், எந்தவித முன்னரிவிப்புமின்றி நேற்று டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி வெளியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திக்கு முக்காடியுள்ளனர். 


இந்தியாவில் ஹிட் அடிக்குமா? 


ஹாலிவுட் ஆக்ஷன், சையின்ஸ் ஃபிக்ஷன் படங்களுக்கென்று இந்தியாவில் பல கோடி ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் மத்தியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான காங்Xகாட்ஸில்லா திரைப்படத்தை பல இந்திய ரசிகர்களுக்கு பிடித்து போனது. உலகளவில் சுமார் 300 மில்லியன் டாலர்கள் வரை வசூல் செய்த இப்படம் இந்தியாவில் மட்டும் சுமார் 85 கோடி வரை வசூல் செய்தது. இதனால், அடுத்து வெளியாகவுள்ள படமும் இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.