“லூசிபர்” படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகியுள்ளதால், படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு கூடி வந்த நிலையில், இப்படமானது அக்டோபர் 5 ஆம் தேதியான இன்று வெளியாகியது.


டோலிவுட் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் தயாராகி வரும் படம்  ‘காட்ஃபாதர்’. இந்த படத்தை பிரபல இயக்குநர் மோகன் ராஜா இயக்க, இசையமைப்பாளர் தமன் படதிற்கு இசையமைத்துள்ளார். ஆர் பி சவுத்ரியின் சூப்பர் குட் பில்ம்ஸ் புரோடக்ஷன்ஸ் இப்படத்தை பெரும் பொருட்செலவில் உருவாக்கியுள்ளது.


நடிகர்கள் நயன்தாரா, சிரஞ்சீவி, பூரி ஜகன்நாத் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளதால், தென் திரையுலக ரசிகர்கள் படத்திற்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர். இதில் சிறப்பு தோற்றத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடித்துள்ளார். இது, ரசிகர்களின் ஆவலை மேலும் தூண்டியது. 


உலகமெங்கும் வெளியான இப்படம், தமிழ்நாட்டில் மட்டும் வெளியாகவில்லை என்ற செய்தி மக்களிடையே வருத்தத்தை உண்டாக்கியுள்ளது. இந்த படம் இன்று வெளியாகிய நிலையில், படத்தை பார்த்த சினிமா ரசிகர்கள் பாசிடீவ் விமர்சனங்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். 






டாலிவுட் மெகா ஸ்டார் சிரஞ்ஜீவியின் தீவர ரசிகர்கள், பாஸ் இஸ் பேக் என்று கூலான கருத்தை பதிவிட்டு அதனுடன் படக்காட்சி ஒன்றினை ஷேர் செய்துள்ளார். 


 






அதனுடன், படத்தின் டிக்கெட்டை போட்டோ பிடித்து பதிவிட்டு, இது மூவி டைம் என்று ஷேர் செய்து தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.






சல்மான் கான், சிரஞ்ஜீவி உருவபடத்தை கட்-அவுட் வைத்தும் கொண்டாடி வருகின்றனர். இதிலிருந்து இப்படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்புகள் நிலவி வருகிறது என்பது புரிகிறது.






இப்படத்தில் சிரஞ்ஜிவியின் நடிப்பு படத்தை தூக்கி நிறுத்த, தமனின் இசை பக்க பலமாக அமைந்து இருக்கிறது என்று மக்கள் தெரிவித்து வருகின்றனர்.


காலையில் இருந்து இப்போது வரை எந்த நெகடிவான விமர்சனங்களும் இப்படத்திற்கு வரவில்லையென்றாலும், சிலர் சிரஞ்ஜீவியை கலாய்க்க வேண்டும் என்றே, சில காமெடியான பதிவுகளை ஷேர் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.