மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியாக உள்ள திரைப்படம் காட்ஃபாதர். சிரஞ்சீவியின் பிறந்த நாளான இன்று காட்ஃபாதர் திரைப்படத்தின் டீசர்  வெளியாகி உள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.






தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் 67வது பிறந்த நாள் இன்று. நட்சத்திர கிரிக்கெட் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் இன்று கலந்து கொண்ட அவர், ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.


சிரஞ்சீவியின் பிறந்தநாள் அறிவிப்பு!


திரையுலக ஊழியர்களுக்காக ஒரு நலத்திட்டத்தை தன் பிறந்தநாளான இன்று தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். அந்த நலத் திட்டம் என்னவென்றால்… திரையுலக ஊழியர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கென பிரத்தியேகமாக ஹைதராபாத்தில் உள்ள சித்ராபூர் காலனியில் மருத்துவமனை ஒன்று கட்ட உள்ளாராம்.அவரது அடுத்த பிறந்தநாள் அன்று, அந்த மருத்துவமனை செயல்பாட்டில் இருக்கும் எனவும் உறுதியளித்துள்ளார். அவருடைய தந்தையின் பெயரில் அந்த மருத்துவமனையை கட்ட உள்ளதாகவும் கூறியுள்ளார்.


சிரஞ்சீவியின் உரை:


அந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், சித்ராபூர் காலனியில் மருத்துவமனை ஒன்று தொடங்குவதற்கு நான் ஆசைப்படுகிறேன். இந்த எண்ணம் சிறிது காலமாகவே எனக்குள் தோன்றியது. மேலும் அந்த மருத்துவமனையில் குறைந்தது பத்து படுக்கைகளாவது அமைக்க  திட்டமிட்டு இருக்கிறேன். இது திரைத்துறை ஊழியர்களின் உடல்நிலை பிரச்சினைகளுக்காக பிரத்தியேகமாக கட்டப்படவுள்ள மருத்துவமனை.  இதன் மூலம் அவர்கள் பெரிய மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என நம்புகிறேன் என்றும் கூறியுள்ளார். மேலும் திரைத்துறையில் தினக்கூலியாகவும், பிபிஎல் பிரிவில் உள்ள ஊழியர்களுக்கு இந்த மருத்துவமனை உதவிகரமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.  




இந்த செயல்பாட்டின் மூலம் தான் பெறும் மன நிம்மதி அளவற்றது எனவும்; இந்த எண்ணம் தனக்கு தோன்றியவுடன், அவர் அதை செயல் திட்டமாக உருவாக்க முடிவெடுத்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த கனவை நனவாக்குவதில் பக்கபலமாக இருக்கும் அவருடைய சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். 


சிரஞ்சீவியின் உறுதிமொழி:


தனது பிறந்தநாள் அன்று இந்த உறுதி மொழியை அனைவருக்கும் அளிப்பதாகவும், அடுத்த பிறந்தநாள் அன்று இந்த மருத்துவமனை செயல்பாட்டில் இருக்கும் என்றும் உறுதி அளித்துள்ளார். எத்தனை கோடி செலவானாலும் சரி,  இதை நான் செய்வேன் என்று கூறியுள்ளார். மேலும் இந்த செயல்பாட்டில் எவருக்கும் விருப்பம் இருந்தால், அவர்களும் தன்னுடன் இணைந்து கொள்ளலாம், அதை தான் மனதார ஏற்றுக் கொள்வதாகவும் கூறியுள்ளார். 


இந்த செயலை, தனக்கு அனைத்தையும் அளித்த திரையுலகிற்கு செய்யப்போகும் நன்றிக்கடனாக சமர்ப்பிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண