தி கோட்


வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் படத்தின் போஸ்ட் ப்ரோடக்‌ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இப்படத்தில்  பிரபுதேவா , பிரஷாந்த் , மோகன் , சினேகா , லைலா , வைபவ் , பிரேம்ஜி , மீனாக்‌ஷி செளதரி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சென்னை , ஹைதராபாத் , தாய்லாந்து , மாஸ்கோ , இலங்கை , இஸ்தான்புல் உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. வரும் செப்டம்பர் மாதம் இப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது


யுவன் இசையில் இரண்டு பாடல்கள் பாடிய விஜய்






தி கோட் படத்தின் முதல் பாடல் விசில் போடு கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிடப் பட்டது. யுவன் இசையில் அமைந்த இந்தப் பாடலை நடிகர் விஜய் பாடியிருந்தார். பெரும் எதிர்பார்ப்புகளுடன் இருந்த ரசிகர்களிடம் இப்பாடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படியான நிலையில் தி கோட் படத்தில் நடிகர் விஜய் மொத்தம் இரண்டு பாடல்களை பாடியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் தி கோட் படத்தில் நடிகர் விஜய் இரண்டு பாடல்களை பாடியிருப்பதாக கூறி ரசிகர்களை உற்சாகப் படுத்தியுள்ளார்.


விரைவில் 2வது பாடல்:


பொதுவாக நடிகர் விஜய் தனது படங்களில் ஒரு பாடலை பாடுவதே வழக்கம் . இப்படியான நிலையில் இப்படத்தில் அவர் இரண்டு பாடல்களை பாட முடிவு செய்த காரணம் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் விவாதித்து வருகிறார்கள். முதலில் வெளியான விசில் போடு பாடல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத காரணத்திற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதா? அல்லது படத்தின் தொடக்கத்திலே எடுக்கப்பட்டதா? என்பது தொடர்பான விவாதங்களில் நெட்டிசன்கள் ஈடுபட்டுள்ளார்கள்.


விஜய் குரலில் அமைந்துள்ள இந்த இரண்டாவது பாடல் வரும் ஜூன் மாதம் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் வெளியிடப் படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 




மேலும் படிக்க : Siragadikka Aasai : வீட்டை பிரிக்க ஸ்ருதியின் அம்மாவின் போட்ட புது பிளான்.. சிறகடிக்க ஆசையில் இன்று


Vijay - Jason: “சினிமாவில் அப்பாவை போல எண்ட்ரீ.. நிச்சயம் சாதிப்பாய்” - விஜய் மகனை புகழ்ந்த ஸ்ரீமன்!