விளாத்திகுளம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டு 4 பேர் கைது செய்யப்பட்டனர்.




தூத்துக்குடி மாவட்டம் கடலோரப் பகுதிகளிருந்து சட்ட விரோதமாக இலங்கைக்கு கஞ்சா, பீடி இலைகள், மஞ்சள், பூச்சி கொல்லி மருந்துகள், களை கொல்லி மருந்துகள் அன்றாடம் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க க்யூ பிராஞ்ச் போலீசார், கடலோரப் பாதுகாப்பு குழும போலீசார், கடலூர் காவல் படை ஆகியோர் கடற்கரை பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.




இந்நிலையில், விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்த இருப்பதாக க்யூ பிரிவு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் வேம்பார் அக்கரை கடற்கரை பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்ட போது IND TN 12 MO 2478 என்ற பதிவில் கொண்ட S நிரோன் என்ற நாட்டுபடகில் கடத்துவதற்கு தயாராக இருந்த 30 கிலோ எடை கொண்ட 84 மூட்டைகளில் ரூ.20 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் கடத்திருப்பது இலங்கைக்கு கடத்த இருந்தது தெரிய வந்தது.




இதனை அடுத்து கடத்தலில் ஈடுபட்ட தூத்துக்குடி தாளமுத்து நகர் பகுதியில் சேர்ந்த கெனிஸ்டன் (29), பென்சிஸ் ராஜா (37), மாதவன்(21), பனிமையகார்வின் (19) ஆகிய நான்கு பேரை க்யூ பிரிவு போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பீடிஇலைகள் இலங்கையில் 50 லட்சம் மதிப்பு பெறும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதியில் தொடர்ச்சியாக இலங்கைக்கு பீடிஇலைகள் கடத்தப்படுவது தொடர்கதை ஆகி வருவது குறிப்பிடத்தக்கதாகும். கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை மேற்பட்ட சம்பவத்தில் சுமார் 20 டன் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக க்யூ பிரான்ச் போலீசார் தெரிவித்தனர்.