தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குநர் செல்வராகவன். காதல் கொண்டேன் திரைப்படத்திற்கு பிறகு நடிகை சோனியா அகர்வாலை திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் இருவருக்குமிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2006 ஆம் ஆண்டு  விவாகரத்து பெற்றனர். அதன் பிறகு  2011 ஜூன் 19ம் தேதி கீதாஞ்சலி என்பவரை செல்வராகவன் மணமுடித்தார். இருவரின் மணவாழ்க்கையும் மகிழ்ச்சியாக சென்றுக்கொண்டிருக்கிறது. அதற்கு அடையாளமாக இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. செல்வராகவன் இயக்கம் மட்டுமல்லாது நடிப்பதிலும் கவனம் செலுத்த ட்தொடங்கியுள்ளார். நடிக்க மட்டுமே வைத்த இயக்குநர்  செல்வராகவனை , நடிகர் செல்வராகவனாக பார்க்க ரசிகர்கள் மட்டுமல்லாது திரைத்துறையினரும் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில் செல்வராகவன் இன்று (செப்டம்பர் 25 ) பதிவிட்ட ட்வீட் ஒன்று வைரலாக பரவி வருகிறது. ”இன்னொருவர் இருந்தால்தான் நிம்மதி என்று ஒரு பொழுதும் நினைத்து விடாதீர்கள். உண்மையில் அதைப் போல் ஒரு இம்சை எதுவும் இல்லை. தனிமையில் இருப்பதே பேரின்பம். பெரும் நிம்மதி.” என குறிப்பிட்டிருந்தார்.







அவ்வளவுதான் சொல்லவா வேண்டும்! ”செல்வராகவன் தனது இரண்டாவது மனைவி கீதாஞ்சலியையும்  விவாகரத்து செய்யப்போகிறார்”, ”பிறகு ஏன் திருமணம் செய்தீர்கள்!”, ”உறவு முறை குறித்த விளக்கத்தை அனுபவம் மூலம் தெரிவிக்கிறார் செல்வராகவன்! “  என பன்முக விவாதத்தையே கிளப்பிவிட்டனர் நெட்டிசன்கள். குறிப்பாக கீதாஞ்சலியை விவாகரத்து செய்யப்போகிறார் என்பது மட்டும் தீயாக பரவ தொடங்கிவிட்டது. இது குறித்து விளக்கம் பெற செல்வராகவன் மனைவி , கீதாஞ்சலியை தொடர்புக்கொண்டோம். ABP நாடிற்கு விளக்கமளித்த கீதாஞ்சலி “ என்ன ஒரு கேவலம்! அவர் எதார்த்தமாக ஒரு ட்வீட் போட்டார்,  எல்லோருக்குமே பொதுவாக ஒரு ஸ்பேஸ் தேவை. அதைத்தான் அவர் பதிவாக போட்டிருக்கிறார்.இது முற்றிலும் மோசமான ஒன்று! அந்த பதிவுக்கு பிறகு நாங்கள் இருவரும்  எவ்வளவும் நேரம் பேசிக்கொண்டிருந்தோம் (சிரிக்கிறார்)  , இன்ஸ்டாகிராமில் எங்களை குறித்த மீம் ஒன்று வந்தது அதில் கூட அவரை டேக் செய்தேன் “ என விளக்கமளித்துள்ளார்.







முன்னதாக செல்வராகவன் - கீதாஞ்சலி தம்பதிகளின் திருமண நாளை முன்னிட்டு கீதாஞ்சலி ட்விட்டரில்  ஷேர் செய்திருந்த பதிவு வைரலானது. அதில் செல்வராகவனை டேக் செய்து “ உன்னை எப்போதுமே காதலிப்பேன் “ என கியூட்டாக புகைப்படங்களுடன் கூடிய பதிவை வெளியிட்டிருந்தார். பிரபலங்கள் அவ்வபோது இடும் சாதாரண பதிவுகளும் கூட வெவ்வேறு கோணங்களில் யூகிக்கப்படுவது சற்று வேதனையளிக்கும் விஷயம்தான்.