பாலிவுட் திரையுலகின் மூத்த மற்றும் பிரபல பாடகர் பூபிந்தர்சிங் . இவர் கடந்த சில தினங்களாக பெருங்குடல் நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில், இவரை சிகிச்சைக்காக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர். இந்த சூழலில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.




அவரது மரணம் தொடர்பாக அவரது மனைவி மிதாலி கூறியதாவது, பெருங்குடல் நோயால் அவதிப்பட்டுவந்த அவர் இன்று உயிரிழந்துவிட்டார். அவரது இறுதிச்சடங்கு நாளை நடைபெறும் என்று கூறினார். பாடகர், கிடாரிஸ்ட் என்று பன்முகம் கொண்ட பூபிந்தர் சிங்கிற்கு வயது 82 ஆகும்.






உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தனிமைப்படுத்தப்பட்ட அவர் நிலைமை மிகவும் மோசமடைந்தது. இந்த சூழலில், அவர் இன்று உயிரிழந்தார். அவரது மறைவிற்கு இந்தி ரசிகர்களும், பாலிவுட் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.




இந்தியில் பிரபலமான தீவானே ஷெகிர் மெய்ன், ஹோக் மஜ்பூர் முஜ்ஹே, உஸ்னே பூலயா ஹோகா, ஆனே சே உஸ்கே ஆயே பஹார், துனியா சுடே யார் நா சுடே, கிசி நாசார் கோதேரா இன்டேஜர் ஆஜ்பி  உள்ளிட்ட ஏராளமான வெற்றிப்பாடல்களை பாடியுள்ளார். இவர் பாடகர் மட்டுமின்றி வயலின் மற்றும் கிட்டார் வாசிப்பதிலும் மிகவும் கைதேர்ந்தவர்.  பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமிதாப்பச்சன், தர்மேந்திரா, ராஜ்குமார் உள்ளிட்ட நடிகர்களின் படங்களுக்கும் இவர் பாடியுள்ளார்.


மேலும் படிக்க : Parthiban : "ஏ" இல்லாமல் யூ, யூ மைனஸ் படங்களை எடுப்பேன் - மதுரை மீனாட்சி தரிசனத்திற்கு பின் நடிகர் பார்த்திபன் பேட்டி


மேலும் படிக்க : Brahmastra: காப்பி அடிக்கலாம்.. அதுக்குன்னு இப்படியா.. கேசரியா பாடலை வச்சி செய்யும் நெட்டிசன்கள்..!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண