பாலிவுட்டுக்கு இணையாக தென்னிந்திய திரைப்பட நடிகர்களின் படங்கள் மெகா ஹிட் அடித்து வசூல் வேட்டை ஆடியுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் முன்னனி நடிகர்கள் நடித்த படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. இப்படங்களின் மூலம் யார் யார் எவ்வளவு கோடி வருமானத்தினை பெற்றுள்ளார்கள் தெரியுமா? இல்லாவிடில் இப்போது தெரிந்து கொள்ளுங்கள்…

 



ரஜினிகாந்த் :
திரைப்படத்துறையில் 80 களில் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர்தான் ரஜினிகாந்த். அவருடைய ஒவ்வொரு படமும் மெகா ஹிட் அடிக்கும் நிலையில் அந்த வரிசையில் பேட்ட படமும் இடம் பெற்றுள்ளது. கபாலி, காலா படத்திற்கு அடுத்தாற்போல் ரஜினி படம் னா, இப்படி தான் இருக்கும் என ரசிகர்களிடம் பாராட்டினைப் பெற்றது தான் பேட்ட.  கடந்த 2019-ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களுக்கிடையே மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது. குறிப்பாக மெகா பட்ஜெட்டாக 100 கோடி ரூபாய் வருவாயினைப் பெற்றார்  நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

 



கமல்ஹாசன் :
திரையுலகில் உலக நாயகன் என்றழைக்கப்படும் கமல்ஹாசனுக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு திரைப்படம் எதுவும் வெளியாகவில்லை. இருந்தபோதும் அவர் தொகுத்து வழங்கிய  பிக்பாஸ் 3 வது சீசன் மிகப்பெரிய கிட் அடித்தது. மற்ற பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சிகளை விட 3 வது சீசன் ரசிகர்களால் மிகவும் பேசப்பட்டது என்றே கூறலாம். இதன் மூலம் கமல்ஹாசன் 34 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளார்.

 



விஜய் :
தமிழ் சினிமாவில் முக்கிய கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருபவர்தான் விஜய். இளைய தளபதி என அன்போடு அழைப்பதற்கு பல ரசிகர்கள் பட்டாளங்களை தன்னுடன் வைத்துள்ளார். மெர்சல் படத்தினை தொடர்ந்து 2019-ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தின் மூலம் 30 கோடி ரூபாய் வருமானத்தை அவர் பெற்றுள்ளார். அதனையடுத்து மாஸ்டர் திரைப்படம் திரையுலகத்திற்கு வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

 



அஜித் குமார் :

அஜித் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம்தான் விஸ்வாசம். குடும்பப் பாங்கான படம் என்பதால் மக்களிடம் நல்ல வரவேற்பினைப்பெற்று  மிகப்பெரிய கிட் அடித்தது என்றே சொல்லலாம். மேலும் இப்படத்தின் மூலம் நடிகர் அஜித் 40.5  கோடி ரூபாய் வருவாயினை பெற்றுள்ளார்.

 



தனுஷ் :

கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான அசுரன் மற்றும் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் மூலம் நடிகர் தனுஷ் 31.75 கோடி  ரூபாய் வசூல் அடித்துள்ளார். இதோடு மட்டுமின்றி தனுஷின் அசுரன் படத்திற்கு  தேசிய விருதும் கிடைத்துள்ளது.

மம்முட்டி :


மலையாள சூப்பர் ஸ்டாரான மம்முட்டி நடித்த மாமங்கம், கணகந்தர்வன், உண்டா, மதுரா ராஜா ஆகிய 4 படங்கள் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. இப்படங்களின் மூலம் 33.5 கோடி ரூபாய் வருமானத்தினைப் பெற்றுள்ளார் மம்முட்டி .

பிரபாஸ் :


தெலுங்கு திரையுலகில் கடந்த 2002-ஆம் ஆண்டு ஈஸ்வர் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் பிரபாஸ், தொடர்ந்து பல்வேறு படங்களின் மூலம் முக்கிய திரையுலக நட்சத்திரமாக பிரபலமானார். இதனையடுத்து கடந்த 2015-ஆம் ஆண்டு பிரபாஸ் நடித்து வெளியான பாகுபலி திரைப்படத்தின் மூலம் இந்தியாவில் முக்கிய நாயகனாக வலம் வருகிறார்.  இவரது நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான சாகோ(Saaho) படத்தின் மூலம் 35 கோடி ரூபாய் வருமானம் அவருக்கு கிடைத்துள்ளது.

மோகன்லால் :

மலையாள சினிமாவில் முன்னனி நடிகர்களாக வலம் வருபவர்களில்  மோகன்லாலும் ஒருவர். மேலும் மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லால் தனது படத்தின் மூலம் 64.5 கோடி ரூபாய் வருமானத்தினை ஈட்டியுள்ளார்.

மகேஷ் பாபு :


‘தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக வலம் வருகிறார் மகேஷ் பாபு. கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான பிரபாஸ் மற்றும் மகரிஷி திரைப்பட வெளியீட்டிற்கு பின்னர் 35 கோடி ரூபாய் வருவாயினை அவர் பெற்றுள்ளார்.