2008-ஆம் ஆண்டு காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் மூலம் நகுலுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானவர் நடிகை சுனைனா. தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மொழியிலும், பிற மொழியிலும் பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், நடிகை சுனைனா தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது, “பொதுவாக சமூகவலைதளங்களில் இதுபோன்ற வீடியோக்களை வெளியிட மாட்டேன். ஆனால், ஒரு அவசர நிலை என்பதால் இதைப் பதிவு செய்கிறேன். ஒன்றரை மாதத்திற்கு முன்பு எனது நண்பர் அவினாஷ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு அந்த மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தற்போது அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக நிதியுதவி தேவைப்படுகிறது. இது மிகவும் அவசரம்.






பத்து ரூபாயாக இருந்தாலும், அது எவ்வளவு சிறிய தொகையாக இருந்தாலும் தயவு செய்து உதவுங்கள். இந்த விவரங்களை முடிந்தவரை பகிரவும். இது பலருக்கும் சென்றடைய வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நான் அதிலிருந்து மீண்டுள்ளேன். எனவே, கொரோனா வைரஸ் என்பது விளையாட்டல்ல என்பது எனக்குத் தெரியும். தயவு செய்து அனைவரும் உதவுங்கள்” என அவர் பேசியுள்ளார்.


மேலும் படிக்க : Maragatha Naanayam 2 | மரகத நாணயம் 2 : சூப்பரான அப்டேட் சொன்ன இயக்குநர்!


மேலும், அவருக்கு உதவுவதற்கா லிங்க் ஒன்றையும் பதிவு செய்துள்ளார். தன்னுடைய தமிழில் ஏதாவது குறை இருந்தால் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளவும் என்றும் கூறியுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அவினாஷ், தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.