எனது குழந்தைகள் சாக்லேட் சாப்பிட்டதே இல்லை எனவும்,  டயட்டில் 80 சதவீதம் சைவ உணவுகள்  என்பதால் தான் எங்களது குடும்பம் ஆரோக்கியமாக உள்ளது என்கிறார் நடிகை ஜெனிலியா.


தமிழ்சினிமாவில் சங்கர் இயக்கத்தில் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ஜெனிலியா. “ அலே..அலே “என்ற பாடலில் அவரின் நடனம் இதுவரை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும். இதனைத்தொடர்ந்து சச்சின், வேலாயுதம், உத்தமபுத்திரன் போன்ற படத்தின் மூலம் ரசிகர்களின் நெஞ்சில் இடம் பிடித்தவர். அதிலும் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்த சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் குறும்புத்தனமாக நடித்திருந்தார். இதுவரை பலருடைய ஹாசினியாகவே வலம் வருகிறார் ஜெனிலியா…





சினிமாத்துறையில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தைக்கொண்டு வலம் வந்த ஜெனிலியா தனது காதலன் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்துக்கொண்டார். இதன் பிறகு படங்களில் நடிப்பதைத் தவிர்த்த ஜெனிலியா தற்போது தயாரிப்பாளராக வலம் வருகிறார். இவருக்கு ரியால் மற்றும் ரிஹில் என்ற இருமகன்கள் உள்ளனர். சினிமாவில் தான் குறும்புத்தனமாக இருந்தாலும் குழந்தைகளுடனும் அதேப்போன்று தான் இருந்துவருகிறார் ஜெனிலியா. ஆனால் அவர்களுடைய உணவு முறைகளில் எப்போதும் தனது குடும்பத்தினருக்கென்று ஒரு விதியைக்கொண்டுள்ளதாகவும் அதனைத்தான் இதுவரை பின்பற்றி வருவதாக ஜெனிலியா தெரிவித்துள்ளார்.


அதன்படி, எங்கள் குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் நாங்கள் மிகுந்தக் கவனத்துடன் இருப்பதாகத் தெரிவித்தார். இதோடு எனது குழந்தைகளுக்காக நாங்களும் 80 சதவீத ஆரோக்கிய உணவுகளைப் பின்பற்றி வருவதாகவும் இதில் சைவ உணவுகள் மட்டும் தான் இடம் பெற்றிருக்கும் என பெருமையுடன் கூறுகிறார். காய்கறிகள், சத்தானப் பழங்கள் போன்றவற்றைத் தவிர, இறைச்சி, முட்டை, பால் போன்றவை இடம் பெறுவதில்லை. மேலும் இன்றைய குழந்தைகள் சாக்லேட்டுக்காக அடம் பிடிப்பதையெல்லாம் பார்த்திருப்போம். ஆனால் என்னுடைய குழந்தைகள், அவர்களின் நண்பர்கள் சாக்லேட் சாப்பிட்டாலும் அது எங்களுக்கு வேண்டாம் என்று கூறுகின்றனர். அந்தளவிற்கு உடல் ஆரோக்கிய விஷயத்தில் சிறுவயதில் இருந்து மேற்கொண்ட வழிமுறைகள் தான் இப்போது மிகுந்த பலனளிப்பதாக பெருமையுடன் கூறுகிறார்.



  •  


இவ்வாறு உணவு முறைகளில் மிகவும் கவனத்துடன் இருப்பது போல, மழைக்காலங்களிலும் எங்களது குழந்தைகளைப்பாதுகாப்பதில் அதிகம் கவனம் எடுத்துக்கொள்வதாகத்தெரிவிக்கிறார். குறிப்பாக சளி, காய்ச்சல் ஏற்பட்டால் ஆவி பிடிப்பது, விக்ஸ் தேய்ப்பது போன்ற முறைகளை மேற்கொள்கிறோம். அதோடு தினமும் குளிக்கும்  போது இரண்டு யூக்கலிப்டஸ் எண்ணெய் குளிக்கிறேன் எனவும் இதனால் சளி மற்றும் இருமலைத் தடுக்க முடிகிறது எனவும் தெரிவித்தார். மேலும் தனது கணவர் ரித்தீசும் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான விஷயத்தைக்கற்றுக்கொடுப்பதில் உறுதுணையாக உள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.