தமிழ் சினிமாவில் ஜாம்பவான்களாக வலம் வந்த மூவர் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் மற்றும் ஜெமினி கணேசன். அந்த காலத்தின் உச்சபட்ச நடிகர்களாக கோலோச்சி வந்தார்கள். அதிலும் காதல் மன்னனாக கொண்டாடப்பட்டவர் நடிகர் ஜெமினி கணேசன். அவர் பெரும்பாலும் காதல் படங்களில் நடித்து வந்ததால் அவரை காதல் மன்னன் என்றே அழைத்தனர். இன்றைய காலகட்டத்தில் நடிகர்கள் பலரும் சாக்லேட் பாய் என அழைக்கப்படுகிறார்கள் ஆனால் திரையுலகின் சாக்லேட் பாய்களுக்கு எல்லாம் முன்னோடியாக வலம் வந்தவர் ஜெமினி கணேசன். இருந்தாலும் ஒரு சிலரால் சாம்பார் என்று அழைக்கப்பட்டார். அதற்கு காரணமாக பல தகவல்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. 


 




காதல் படங்கள் பெரும்பாலும் கைகொடுத்து வெற்றி பெற்று வந்த நிலையில் திடீரென அவரின் கவனம் ஆக்ஷன் படங்கள் மீது சென்றது. அது அவருக்கு சற்றும் பொருந்தாததால் மக்கள் அவரை சாம்பார் என அழைத்தனர் என ஒரு தரப்பினர் சொல்லி வர வில்லன், ஹீரோ, காமெடி, ஆக்ஷன், ரொமான்ஸ், ஆன்மீக கதாபாத்திரங்கள், குணச்சித்திர வேடம் என பல தரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளதால் அறுசுவை நிறைந்த உணவில் சாம்பார் எப்படி இடம் பெறுகிறதோ அதை போல பல வகையான கதாபாத்திரங்களிலும் கலக்கியவர் என்பதால் அவரை சாம்பார் என அழைத்தார்கள் என கூறப்படுகிறது.


 


ஆனால் நடிகர் ஜெமினி கணேசன் ஏன் சாம்பார் என அழைக்கப்பட்டார் என்பதற்கான உண்மையான காரணத்தை அவரின் மகள் கமலா செல்வராஜ் பகிர்ந்துள்ளார். என்னுடைய அப்பா ஜெமினி கணேசன் மிகவும் அழகாக இருப்பார். அவர் ஒரு பிட்னஸ் ஃப்ரீக் என்று கூட சொல்லலாம். தினமும் நன்றாக உடற்பயிற்சி செய்து அவருடைய உடலை கட்டுக்கோப்பாக மெயின்டெய்ன் செய்து கொள்வார். இருப்பினும் அவர் ஒரு வெஜிடேரியன் என்பதால் அவரை சாம்பார் என அழைக்க தொடங்கினார்கள். 



ஜெமினி கணேசன் அழகில் மயங்காத பெண்களே கிடையாது. அவருக்கு நான்கு மனைவிகள். அதில் மூத்த மனைவியின் மகள் தான் மருத்துவர் கமலா செல்வராஜ்.