Leo Gowtham menon: நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தில் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் நடிக்கும் கேரக்டர் என்று ஒரு புகைப்படம் வெளியாகி இணையத்தில் தொடர்ந்து வைரலாகி வருகிறது. 


லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் லியோ படத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், இயக்குநர்கள் மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி, சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ் என பலர் நடித்துள்ளனர். படம் வரும் அக்டோபர் மாதம் 19ம் தேதி ரிலீசாவதையொட்டி போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. கிராபிக்ஸ் மற்றும் டப்பிங் பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. 


மிகவும் எதிர்பார்க்கப்படும் லியோவின் ஒவ்வொரு அப்டேட்களும் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. ஏற்கெனவே பிறந்த நாட்களையொட்டி அர்ஜூன் மற்றும் சஞ்சய் தத்தின் சிறப்பு கிளிம்ப்ஸ் வீடியோக்களை படக்குழு வெளியிட்டிருந்தது. முன்னதாக விஜய் பாடிய ‘நான் ரெடி பாடல்’ வெளியாகி இணையத்தில் டிரெண்டானது. திரைப்படம் அடுத்த மாதம் ரிலீசாக உள்ளதால் பிரமாண்ட இசை வெளியீட்டு விழாவை செப்டம்பர் 30 ஆம் தேதி நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. 


இந்த நிலையில் படத்தில் நடித்திருக்கும் கவுதம் வாசுதேவ் மேனனின் கேரக்டர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. லியோ படத்தில் காவல்துறை அதிகாரியாக கவுதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக போலீஸ் உடையில் கவுதம் வாசுதேவ் மேனன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது. லியோவில் நடித்துள்ள பாபு ஆண்டனி இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளதால், கவுதம் வாசுதேவ் மேனனின் கேரக்டர் போலீஸ் தான் என கூறப்படுகிறது.






லியோ ரிலீசையொட்டி இங்கிலாந்தில் ஒரே நாளில் 10,000 மேற்பட்ட டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. ரிலீஸுக்கு முன்பாகவே இங்கிலாந்தில் பாக்ஸ் ஆபிசில் கலெக்‌ஷனை தொடங்கியுள்ளதால் லியோ படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். இதற்கிடையே லியோ படத்தில் இடம்பெற்றிருக்கும் நான் ரெடி தான் பாடலில், போதை பழக்கத்தை ஊக்குவிப்பதாக கூறப்படும் காட்சிகளையும், பாடலின் வரிகளையும் நீக்க சென்சார் வாரியம் உத்தரவிட்டுள்ளது. எனினும், இங்கிலாந்தில் எந்த காட்சிகளும் கட் செய்யாமல் முழுவதுமாக லியோ படம் ரிலீஸ் செய்யப்படும் என விநியோகஸ்தர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க: Mark Antony Review: விஷாலை ஓரம் கட்டிய எஸ்.ஜே.சூர்யா.. கொண்டாட வைத்ததா “மார்க் ஆண்டனி” படம்?.. முழு விமர்சனம் இதோ..!