கௌதம் வாசுதேவ் மேனன் , சிம்பு , ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியான திரைப்படம் வெந்து தணிந்தது காடு. எப்போதுமே காதல் , ரொமான்ஸ், நகர வாழ்க்கை என தனக்கென ஒரு பாணி வைத்திருந்த கௌதம் மேனம் , முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் , கிராமத்து பின்னணியில் உருவாக்கியிருக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஒரு வாரத்திலேயே பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்ஷனை குவித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இது ஒரு புறம் இருக்க வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் தெலுங்கு புரமோஷனின் ஜி.வி,எம் பங்கேற்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. சொல்லப்போனால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.
தெலுங்கில் முன்னணி யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த கௌதம் மேனனை , தொகுப்பாளர் ஒருவர் மணிரத்தினம் என தவறாக புரிந்துக்கொண்டு அவரிடம் 2018-ல் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான செக்க சிவந்த வானம் பற்றி கேள்வி கேட்க , அதனை புரிந்துக்கொண்ட கௌதம் மேனம் அதனை தக் லைஃப் செய்திருக்கிறார்.
தொகுப்பாளர் “ சிலம்பரசன் , விஜய் சேதுபதி என மிகப்பெரிய நடிகர்களை ஒரே படத்தில் ஒருங்கிணைப்பது எவ்வளவு சவாலாக இருந்தது ?” என கேட்க . தொகுப்பாளர் செக்க சிவந்த வானம் படத்தை பற்றிதான் கேட்கிறார் என்பதை புரிந்துக்கொண்ட கௌதம் மேனன் “ சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் மற்றும் அரவிந்த் சுவாமியுடன் பணியாற்றுவது மிகவும் கடினமாக இருந்தது. அவர்களின் தேதிகளைப் பெறுவது..... உங்களுக்குத் தெரியும்......அவர்கள் அனைவரும் மிகவும் பிஸியான நடிகர்கள். ஆனால், நான்..... ’மணிரத்னம்’...நான் அழைத்தால் எளிதாக வந்துவிடுவார்கள். நான் காலை 4:30-5 மணிக்கு ஷூட்டிங் ஆரம்பிக்கிறேன் என்றால் அனைவரும் அங்கே இருப்பார்கள். காலை 7 மணிக்கு கௌதம் மேனன் படங்களுக்கு சிம்பு வரமாட்டார் என்பார்கள் , ஆனால் மணி சார்... நான் அழைத்தால் ..சிம்பு காலை 4:30 மணிக்கெல்லாம் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பார்... அது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது “ என விளையாட்டாக பதிலளித்தார்.
இயக்குநர் கௌதம் மேனன் ஆரம்பத்தில் , இயக்குநர் மணிரத்தினத்திடம் இயக்குநராக பணியாற்ற வேண்டும் என்பதுதான் ஆசையாக இருந்திருக்கிறது. ஆனால் நிறைவேறவில்லை. ஆனால் மணிரத்தினம் தயாரித்த ஆந்தாலஜி வெப் தொடரான ‘நவரசா’வில் அவருடன் இணைந்து பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.