AIADMK; திமுக அரசைக் கண்டித்து கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. கோவையில் குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க கோரியும், சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்தும் இந்த  போராட்டம் நடைபெறுகிறது.  இந்த போராட்டத்தில் முன்னாள் முதல்வரும் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிச்சாமியும் கலந்து கொண்டுள்ளார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கோவை மாவட்டம் மட்டும் இல்லாமல் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் அதிமுக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டுள்ளனர். 


கருப்புச் சட்டை


கருப்புச் சட்டை அணிந்தபடி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.  அதேபோல் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், செ.ம.வேலுசாமி உள்ளிட்டோரும் இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர்.