Garudan: சூரி - வெற்றிமாறன் - சசிகுமார் இணையும் படத்தின் டைட்டில் வீடியோ! அசத்தல் அறிவிப்பு தந்த படக்குழு!

Garudan Movie: ஆர்.எஸ். துரை செந்தில் குமார், சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியொர் இணைந்து நடிக்கும் திரைப்படத்துக்கு கருடன் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

Continues below advertisement

நடிகர் சூரி - இயக்குநர் சசிகுமார் இணைந்து நடிக்கும் 'கருடன்' படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.

Continues below advertisement

எதிர் நீச்சல், காக்கிச்சட்டை, கொடி ஆகிய திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் கவனமீர்த்தவர் இயக்குநர் துரை செந்தில் குமார். இவரது இயக்கத்தில், சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் அப்டேட் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி தற்போது இப்படத்தின் டைட்டில் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. கருடன் இப்படத்துக்கு பெயரிடப்பட்டுள்ள நிலையில், சூரி, சசிகுமார் இணைந்திருக்கும் காட்சி ஒன்றும் பகிரப்பட்டுள்ளது.

சொக்கன் எனும் கதாபாத்திரத்தில் விசுவாசமான நாயகனாக இந்த வீடியோவில் சூரி தோன்றும் நிலையில்,  “விசுவாசத்துல மனுஷனுக்கும் நாய்க்கும் போட்டி வந்தா எப்பவும் நாய் தான் ஜெயிக்கும், ஆனால் அதே நாய்க்கும் சொக்கனுக்கும் போட்டி வந்தா, சொக்கன் தான் ஜெயிப்பான்” என சூரியின் கதாபாத்திரத்தைப் பற்றி சசிகுமார் கதாபாத்திரம் விவரிக்கும் வகையிலான காட்சிகள் இடம்பெற்று கவனமீர்த்துள்ளன.

 

வெற்றிமாறன் இப்படத்துக்கு கதை எழுதும் நிலையில், இப்படத்துக்கு இது கூடுதல் சிறப்பம்சமாக அமைந்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசை அமைக்கிறார். 

முன்னதாக வெற்றிமாறனின் விடுதலை படத்தில் சூரி கதாநாயகனாக ப்ரொமோஷன் ஆன நிலையில், இந்தப் படத்தில் சூரியின் நடிப்பு பெரும் பாராட்டுகளைப் பெற்றது. மேலும் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் சூரி - வெற்றிமாறன் மீண்டும் இணையும் இப்படத்தின் அப்டேட் வெளியாகி இருவரது ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் படிக்க: அன்னபூரணி விவகாரம்: ”கோயில்களுக்கு செல்கிறேன்.. அப்படி நினைக்கவில்லை..” வருத்தம் தெரிவித்த நயன்தாரா

RJ Balaji: கோலிவுட்டிலும் நெப்போடிஸம்! விஜய் சேதுபதி போன்றவர்கள் எங்களை ஊக்குவிக்கிறார்கள் - ஆர்.ஜே.பாலாஜி

Continues below advertisement
Sponsored Links by Taboola