Garudan Movie Box Office Collection: கருடன் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது.  காமெடியனிலிருந்து ஹீரோவாக மாறி சமீப காலமாக தமிழ் சினிமாவில் கலக்கி வரும் சூரியின் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘கருடன்’.


அப்ளாஸ் அள்ளும் சூரியின் நடிப்பு


துரை செந்தில் குமார் இயக்கியுள்ள இப்படத்தில் சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகர்கள் சசிக்குமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி, வடிவுக்கரசி, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.


முன்னதாக விடுதலை படத்தில் காவல் அதிகாரியாக நடித்து அப்ளாஸ் அள்ளிய சூரி இப்படத்தில் ஆக்‌ஷன் அவதாரத்தில் மாஸ் காண்பித்துள்ளார். நட்பின் இலக்கணமாக விளங்கும் சசிக்குமார் - உன்னி முகுந்தன் இருவரது வாழ்வில் வந்து சேரும் சூரி அவர்களைக் காத்து விஸ்வாசமாக வாழ்ந்து வரும் நிலையில், அமைச்சர் ஒருவரின் தலையீட்டால் எப்படி இவர்களது வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது, இவர்கள் நட்புக்கு நேர்வது என்ன என்பதைச் சுற்றி படத்தின் கதை அமைந்துள்ளது.


முதல் நாள் பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்


நேற்று வெளியான இப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை அள்ளி வருவதுடன், முதல் நாள் பாக்ஸ் ஆஃபிஸிலும் வரவேற்பினைப் பெற்றுள்ளது.  இந்நிலையில், கருடன் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, கருடன் திரைப்படம் முதல் நாள் மட்டும் இந்தியா முழுவதும் ரூ.3 கோடி வசூலை அள்ளியுள்ளதாக பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளைப் பகிரும் சாக்னிக் தளம் பகிர்ந்துள்ளது.


மேலும் இரண்டாம் நாளான இன்று தற்போது வரை கருடன் படம் ரூ.1.3 கோடிகளை வசூலித்துள்ளதாகவும், மொத்தம் ரூ. 4.3 கோடிகளை வசூலித்துள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது.






 இன்றும் நாளையும் விடுமுறை தினங்களை ஒட்டி படத்தின் வசூல் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க: Garudan Movie Review: நட்பு, பகை, விஸ்வாசம்.. மீண்டும் ஹீரோவாக ஜெயித்தாரா சூரி.. கருடன் விமர்சனம் இதோ!


Hit List Review: ஹிட் அடிக்குமா ஹிட் லிஸ்ட்? மகனை நல்ல ஹீரோவாக செதுக்கினாரா இயக்குநர் விக்ரமன்? முழு திரைவிமர்சனம்