சூரி


காமெடி நடிகராக மக்களை சிரிக்க வைத்த சூரி (Actor Soori) விடுதலை படத்தின் மூலம் நாயகனாக அவதாரமெடுத்தார். தற்போது கருடன் படத்தில் ஆக்‌ஷன் ஹீரோவாகக் களமிறங்க இருக்கிறார். துரை செந்தில்குமார் இயக்கியிருக்கும் கருடன் படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வரும் மே 31ஆம் தேதி திரையரங்கில் இப்படம் வெளியாக இருக்கிறது. கருடன் படத்திற்கான ப்ரோமோஷன்களில் தனது சினிமா பயணத்தைப் பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிவித்து வருகிறார் சூரி.


சென்னை வந்து சாக்கடை அள்ளினேன்


மதுரையில் இருந்து நடிகனாக வேண்டும் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று கனவுகளோடு வந்த சூரி சென்னை வந்து பார்க்காத வேலையே இல்லை. லாரிக்கு க்ளீனராக செல்வதில் இருந்து, சாக்கடை அள்ளுவது வரை எல்லா வேலைகளையும் தான் பார்த்திருப்பதாக சமீபத்தில் தெரிவித்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே தனது சினிமா பயணத்தை பஸ் கண்டக்டராக இருந்து தான் தொடங்கினார் என்பதால் அதையே ஊக்கமாக எடுத்துக் கொண்டு பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருக்கிறார் சூரி. “எத்தனையோ படங்களுக்கு போஸ்டர்களை ஒட்டியிருக்கிறேன், ஆனால் இன்று என்னுடைய படத்தின் போஸ்டர்களை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது” என சூரி தெரிவித்துள்ளார்.


முரட்டு ரஜினி ரசிகன்






தான் ஒரு மிகப்பெரிய ரஜினி ரசிகன் என்று சூரி பல்வேறு நேர்காணல்களில் தெரிவித்து வருகிறார். மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தில் ரஜினியைப் பார்த்து கூச்சலிட்டு கடைசியில் திரையரங்க உரிமையாளர்கள் அவரை வெளியே துரத்திவிட்டதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார்.


அதேபோல் ரஜினியின் எஜமான் படத்தின்போது ரஜினி திரையில் வரும்போது கிழித்து போட தன்னிடம் பேப்பர் எதுவும் இல்லாத காரணத்தினால், போட்டிருந்த சட்டையைக் கழற்றி வீசி எறிந்திருக்கிறார். படம் முடிந்தபின் கூட்டிப் பெருக்க வந்த பெண் ஒருவர்தான் அந்த சட்டையை எடுத்து தந்ததாக அவர் தெரிவித்துள்ளார். 




மேலும் படிக்க : அடுத்த வாரம் திருமணம்... முன்பே நேரில் சென்று வாழ்த்திய விஜய் சேதுபதி - மதுரையில் ரசிகர்கள் நெகிழ்ச்சி


Siragadikka Aasai: மீனாவுக்கு காய்ச்சல்.. பொருட்படுத்தாமல் அவமானப்படுத்தும் விஜயா.. சிறகடிக்க ஆசையில் இன்று!