எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளிவந்த பிளாக்பஸ்டர் திரைப்படம் ’’ஆர் ஆர் ஆர்’’. இந்த திரைப்படத்தை சமீபத்தில் பார்த்துள்ள கேம் ஆஃப் த்ரோன்ஸ் படத்தில் நடித்த ஹாலிவுட் நடிகை நத்தாலி ஆர் ஆர் ஆர் மிக நன்றாக இருப்பதாக தெரிவித்தார்; மேலும் அவர் திரைப்படத்தின் பிரமாண்டத்தைப் பார்த்து ஆச்சரியமடைவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

Continues below advertisement

மேலும் நடிகை நத்தாலி படத்தின் சில காட்சிகளை தன்னுடைய ட்விட்டரில் பகிர்ந்து ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, "பாடல் காட்சி ஒன்றை பகிர்ந்து பாடலில் நடனம் சூப்பராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்; மேலும் படக்குழுவினரின் உழைப்பை பாராட்டியதோடு,  நடிகைகள் ஆலியா பட், ஆலி ஜெனி, ஸ்டன்ட் மாஸ்டர் கிங் சாலமன் ஆகியோரைக்  குறிப்பிட்டும் பாராட்டியுள்ளார். 

மொத்தத்தில் ஆர் ஆர் ஆர் திரைப்படம் வேற லெவல் என்று கூறியுள்ளார் கேம் ஆஃப் த்ரோன்ஸ் நடிகை நத்தாலி இம்மானுவேல்.

ஆர் ஆர் ஆர்:

2023 ஆண்டு ஆஸ்கர் நியமன பட்டியலில் சிறந்த திரைப்படம் சிறந்த நடிகர் என மொத்தம் 14 தலைப்புகளின் கீழ் ஆர் ஆர் ஆர் திரைப்படம் இடம்பெற்றுள்ளது. மேலும் ’நாட்டு நாட்டு’ என்ற பாடல் சிறந்த பாடல் பட்டியலிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளது; இந்த மகிழ்ச்சியான செய்தியை படத்தின் நடிகர்கள் ட்விட்டரில் தெரிவித்திருந்தனர்; இதைத் தொடர்ந்து தற்போது ஹாலிவுட் நடிகையின் பாராட்டுக்களும் படக்குழுவினருக்கு மகிழ்ச்சி அளித்திருக்கும்..

எஸ் எஸ் ராஜமௌலியின் ஆர் ஆர் ஆர்  திரைப்படம் 2022 ஆம் ஆண்டின் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் திரைப்படமாக அமைந்தது; உலக அளவில் 1,144 கோடி பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை ஈட்டியுள்ளது. மேலும் இந்தியாவின்  அதிக வசூல் செய்த திரைப்படங்களில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.