கேம் சேஞ்சர் பாடல்கள் பற்றி தமன்
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர் இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியானது. பெரியளவில் எதிர்பார்க்கப்பட்டு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரிய அடிவாங்கியது. இப்படத்தின் பாடல் காட்சிகளுக்கு மட்டுமே 70 கோடி செலவிட்டது தயாரிப்பு நிறுவனம். பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு , ஆயிரக்கணக்கான நடன கலைஞர்களை ஆட வைத்து , வெளிநாடுகளில் பாடல் காட்சிகள் என அத்தனை உழைப்பும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க தவறிவிட்டது. இப்படத்தின் பாடல்களும் பெரியளவில் ஹிட் ஆகவில்லை. கேம் சேஞ்சர் படத்தின் பாடல்கள் ஹிட் ஆகாததற்கு தான் காரணமில்லை என இசையமைப்பாளர் தமன் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
சுமாரான டான்ஸ் தான் காரணம் - தமன்
" கேம் சேஞ்சர் பாடல்கள் பெரியளவில் ஹிட் ஆகாததற்கு நான் காரணம் இல்லை. ஒரு இசையமைப்பாளராக ஒரு பாட்டுக்கு 25 முதல் 50 மில்லியன் வியுஸ் கொடுக்கலாம். அதை தாண்டி அந்த பாட்டு ரீல்ஸில் தான் ஹிட் ஆக முடியும். பாட்டுக்கு ஏற்ற மாதிரி கோரியோகிராபர் ஸ்டெப்ஸ் அமைக்க வேண்டும். கேம் சேஞ்சர் படத்தில் எந்த பாட்டிற்கும் நல்ல ஹூக் ஸ்டெப் கூட கிடையாது. ஆல வைகுந்தபுரமுலோ படத்தில் நான் இசையமைத்த எல்லா பாட்டிற்கும் ஒரு ஹுக் ஸ்டெப் இருந்தது. ஆனால் கேம் சேஞ்சர் படத்தில் அப்படி எதுவும் இல்லை. இந்தியில் பேபி ஜான் பாட்டிற்கும் ஒரு ஹூக் ஸ்டெப் இருந்தது. அந்த பாட்டு எப்படி வரவேண்டும் என்று இயக்குநருக்கு ஒரு தெளிவு இருந்தது. படத்தின் நடிகர் , டான்ஸ் மாஸ்டர் என எல்லாரும் தான் இதற்கு பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் . கேம் சேஞ்சர் படத்தில் நான் இசையமைத்த எல்லா பாட்டும் மக்களுக்கு பிடித்தது ஆனால் அந்த பாடல்களுக்கு ரீல்ஸ் போடும்படி எந்த ஹூக் ஸ்பெப்பும் இல்லாததால் அது பெரியளவில் ரீச் ஆகவில்லை. " என தமன் தெரிவித்துள்ளார்