'ஜென்டில்மேன்' படம் மூலமாக இயக்குநராக அவதாரம் எடுத்தவர் இயக்குநர் ஷங்கர். பிறகு காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன், நண்பன், ஐ என்று பிரம்மாண்டமான படங்களை இயக்கி அடுத்தடுத்த ஹிட்டை திரையுலகில் பதிவு செய்தார்.

Continues below advertisement

இவர் இயக்கிய எல்லா படங்களும் ஹிட் கொடுத்ததால் ஜீரோ பிளாப் இயக்குனர் என பெயர் எடுத்தார். ஆனால் கடந்த இரண்டு வருடமாகவே இவருக்கு நேரம் கொஞ்சம் சரி இல்லை என்று தான் சொல்ல வேண்டும். 400 கோடி பட்ஜெட்டை கொட்டி, இவர் கமல்ஹாசனை வைத்து இயக்கிய இந்தியன் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

Continues below advertisement

அதே போல் இந்த ஆண்டு 400 கோடி பட்ஜெட்டில் உருவான, 'கேம் சேஞ்சர்' படமும் அட்ட பிளாப் ஆனது. பிரமாண்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தியதால், கதையில் இயக்குனர் ஷங்கர் கோட்டை விட்டு விட்டதாக கூறப்பட்டது. இந்த இரு படங்களின் படு தோல்வியால்...  இப்போது இந்தியன் 3 படத்திற்கு செலவு செய்ய லைகா விருப்பம் தெரிவிக்கவில்லை.

தோல்வியை தொடுத்தாலும், தன்னுடைய சம்பளத்தில் இருந்து சல்லி பைசா குறைக்க மாட்டேன் என இயக்குனர் ஷங்கரும் பிடிவாதமாக உள்ளதால்... இப்போதைக்கு இந்தியன் 3 படம் துவங்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க ஷங்கர் அடுத்ததாக இளம் ஹீரோ ஒருவரை வைத்து படம் எடுக்க திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியான நிலையில் அதற்கான பணிகளும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறதாம். அப்பா ஒரு பக்கம் இயக்கத்தில் கலக்கி கொண்டிருந்தாலும், மகள் அதிதி நடிப்பில் படு பிசியாக உள்ளார். 

அதிதியை தொடர்ந்து, ஷங்கரின் மகனும் ஹீரோவாக நடிக்க உள்ளாராம். தற்போது இயக்குநர் ஏ ஆர் முருகதாஸிடம் உதவி இயக்குநராக அர்ஜித் பணியாற்றி வரும் நிலையில், பிரபு தேவா இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் - இயக்குனர் பிரபு தேவாவின் மகன் ரிஷி ராகவேந்திரா நடிக்க ஆசை படுவதாக, சமீபத்தில் கொடுத்த பேட்டியில் பிரபு தேவாவே கூறி இருந்த நிலையில், மகனுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு வேறு ஒரு இயக்குனர் மகனை ஹீரோவாக வைத்து பிரபு தேவா இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.