வொண்டர் வுமன் படத்தின் மூன்றாம் பாகம் வெளியாகும் என நடிகை கேல் கெடாட் தெரிவித்திருக்கும் நிலையில்  அதற்கான எந்த முயற்சியும் டி.சி ஸ்டுடியோஸ்  எடுக்கவில்லை என்கிற தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


கேல் கெடாட்


கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான வொண்டர் வுமன் திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகை ‘கேல் கேடாட்’ இவருக்கு உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.  கடந்த 2008-ஆம் ஆண்டு ஜான் வர்சானோவை  கேல் கெடாட் திருமணம் செய்துகொண்டார். திருமணமாகியும் ஏராளமான படங்களில் நடித்து அசத்தி வருகிறார் கெடாட்.


பேரழகியான கிளியோபட்ராவின் வாழ்க்கையில் நடிப்பதற்கு கேல் கெடாட் ஒப்பந்தம் செய்யப்பட்டபொழுது அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின.  ஆஸ்கேன்ஸாய் யூத பாரம்பர்யத்தை சேர்ந்த கேல் கடோட் எகிப்தியன் பேரழகியாக நடிப்பது சிகப்பு நிறத்திற்கு  முக்கியத்துவம் கொடுக்கும் வழக்கமான தவறின் தொடர்ச்சி என உலகம் முழுவது எதிர்ப்பு குரல்கள் எழுந்தன.


கிளியோபட்ராவாக நடிக்க கருப்பு நிறத்தில்  இருக்கும் நடிகையை ஏன் தேர்வு செய்ய கூடாது? இது வரலாற்றையே மாற்றும் செயலாக அல்லவா உள்ளது என  என பலரும் கேள்வி எழுப்பியது நினைவு கூறத்தக்கது.


வொண்டர் வுமனாக அசத்திய கேல் கெடாட்


டி.சி யூனிவர்ஸில் பகுதியாக வெளியான பேட்மேன் vs சூப்பர்மேன் படத்தில் வெண்டர் வுமனாகத் தோன்றினார் கேட் கெடாட். இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு கிடைத்த பெரும் வரவேற்பைத் தொடர்ந்து வொண்டர் வுமனை வைத்து தனியாக ஒரு படத்தை வெளியிட்டது டி.சி தயாரிப்பு நிறுவனம்.


ஆண்களால் மட்டுமே நிறைந்திருந்த சூப்பர்ஹீரோக்களின் உலகத்தில் முதல் முறையாக சூப்பர் பவர்களைக் கொண்ட ஒரு பெண்ணாக நடித்து திரையரங்குகளில் வசூலை அள்ளினார் கேல். இதனைத் தொடர்ந்து வெண்டர் வுமனின் இரண்டாவது பாகமும் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்தது.


வெளியாகுமா மூன்றாவது பாகம்?


தற்போது மூன்றாவது பாகம் எப்போது வெளியாகும் என காத்து வருகிறார்கள் ரசிகர்கள். சமீபத்தில் நேர்காணலில் ஒன்றில் இந்த கேள்வி கேல் கெடாட்டிடம் கேட்கப்பட்டது. அப்போது தனக்கும் டி.சி நிறுவனத்திற்கும் இடையில் நிகழ்ந்த உரையாடலைப் பகிர்ந்துகொண்டார். டி.சி நிறுவனத்தில் தலைமை பொறுப்புகளில் இருக்கும் ஜேம்ஸ் கன் மற்றும் பீட்டர் சேஃப்ரன் ஆகிய இருவரையும் தான் சந்தித்தபோது, வொண்டர் வுமன் படத்தின் மூன்றாம் பாகம் நிச்சயம் வெளிவரும் என்றும் அதற்கான வேலைகள் நடந்துவருவதாகவும் அவர்கள் கூறியதாக தெரிவித்தார்.


ஆனால் திரைப்பட ஆர்வலர்கள் பகிர்ந்து கொண்ட தகவலின்படி அப்படியான எந்த முயற்சிகளும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் குழப்பத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள்.


ஹாலிவுட்டில் நிகழ்ந்துவரும் போராட்டம்


ஹாலிவுட்டில் தற்போது தயாரிப்பு நிறுவனங்களுக்கும் திரைப்படம் எழுத்தாளர்களுக்கும் இடையில் கடும் கருத்துவேறுபாடு நிகழ்ந்து வருகிறது. இதனால் எழுத்தாளர்கள் அனைவரும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதன் விளைவாக பெரும் செலவில் உருவாக திட்டமிடப் பட்டிருந்த திரைப்படங்களின் வேலைகள் நிலுவையில் இருக்கின்றன. இப்படியான சூழ்நிலையில் வெண்டர் வுமன் மூன்றாம் பாகத்திற்கான வேலைகள் தொடர்ந்து வருவதற்கான சாத்தியங்கள் குறைவாகவே இருக்கின்றன. காலம் தான் பதில் சொல்ல வேண்டும் .