ஜி.வி பிரகாஷ் குமார்


வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி பிரகாஷ். ஏ. ஆர்.ரஹ்மானின் உதவியாளனாக தனது இசைப்பயணத்தைத் தொடங்கிய ஜி.வி தமிழ் சினிமாவின் பல படங்களுக்கு தனது முத்திரை பதிக்கும் பாடல்களை வழங்கியுள்ளார். அங்காடித் தெரு, மதராசப்பட்டினம், ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, ராஜா ராணி, தெய்வத் திருமகள், தலைவா என தன்னுடைய தனித்துவமான இசையில் 100 படங்களை நெருங்கி இருக்கிறார். தற்போது தன்னுடைய நூறாவது படமாக சுதா கொங்காரா இயக்கும் சூர்யா 43 படத்துக்கு இசையமைக்கிறார்.


நடிப்பு பயணம்


இசையமைப்பாளராக மட்டுமில்லாமல் நடிப்பதிலும் ஜி.வி பிரகாஷ் ஆர்வம் காட்டத் தொடங்கினார். தொடக்கத்தில் அவரது நடிப்பு குறித்து பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் த்ரிஷா இல்லனா நயன்தாரா, டார்லிங் என இவர் நடித்த படங்கள் ரசிகர்களைக் கவர்ந்தன. பாலா இயக்கிய நாச்சியார் படத்தில் வழக்கமான கதாபாத்திரமாக இல்லாமல் மாறுபட்ட ஒரு முயற்சியிலும் இறங்கினார். இதனைத் தொடர்ந்து பேச்சிலர்,  சமீபத்தில் வெளியான அடியே உள்ளிட்டப் படங்கள் நல்ல வெற்றியைக் கொடுத்தன. தற்போது ஜிவி பிரகாஷ் இசையமைப்பது நடிப்பது என படு பிஸியாக இருந்து வரும் நிலையில் அவர் நடித்துள்ள அடுத்த படத்திற்கு ரிபெல் (புரட்சியாளன்) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.


ரிபல்






ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்கும் இந்தப் படத்தை  நிகேஷ் ஆர்.எஸ் இயக்குகிறார். ஜி.வி பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கிறார். சமீபத்தில் இந்தப் படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டதைத் தொடர்ந்து இன்று மாலை 6 மணியளவில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருக்கிறது.


சேகுவேரா இடம்பெற்றிருக்கும் இந்தப் படத்தின் போஸ்டரை முன்னதாக வெளியிட்ட படக்குழு, நடிகர் சிலம்பரசன் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடவிருப்பதாகவும் கூறியுள்ளார். படத்தின் போஸ்டர் மற்றும் டைட்டிலை வைத்து பார்க்கும் போது சமூக பிரச்சனைகளை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.


தயாரிப்பாளர்


இசையமைப்பது மட்டுமில்லாமல் தற்போது தயாரிப்பாளராகவும் உருவெடுக்க இருக்கிறார் ஜி.வி பிரகாஷ் குமார். தனது முதல் தயாரிப்பாக கிங்ஸ்டன் என்கிற படத்தை அவர் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.




 மேலும் படிக்க : Baakiyalakshmi: கோபியை நோஸ் கட் செய்த பாக்கியா.. செழியனை மிரட்டும் மாலினி - பாக்கியலட்சுமியில் இன்று  


Leo Movie: லியோ படம் வேறு வழியில்லாமல் திரையிட்டுள்ளோம்.. லாபமே இல்லை.. திருப்பூர் சுப்பிரமணியம் விமர்சனம்..