G. P. Muthu: TTF வாசனாக மாற நினைத்த ஜி.பி.முத்து... அதன் பின் நடந்த பயங்கரம்!

‛அடப்பாவிகளா... நான் கீழே விழுந்துட்டேன்... நீங்க ரசிக்கிறீங்க...’ என வழக்கமான தன் பாணியில், குழந்தைகளை கடிந்து கொண்டு, அவரும் சிரித்து, நம்மையும் சிரிக்க வைக்கிறார்’

Continues below advertisement

‛வாழ்க்கையில் ஆயிரம் தடைக் கல்லப்பா... தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா...’ என, சீரியஸ் பாடல்வரிகளை வைத்து, கலாய்க்கப்படும் ஒரே செலிபிரிட்டி ஜி.பி.முத்து. நெல்லையில் கடைக்கோடியில் இருந்து கொண்டு, உலகம் முழுதும் உள்ள தமிழர்களை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் ஜி.பி.முத்துவின் ஒவ்வொரு சேஷ்டையும், ரசிக்க கூடியதே.

Continues below advertisement

பாமரனாக இருந்து, அதே பாமரத்தன்மையோடு அவர் செய்யும் நகைச்சுவை, பலரையும் கவர்கிறது. அந்த வகையில் சமீபத்தில் பேமஸ் ஆன ‛டிடிஎப்’ வாசனைப் போல, அவரும் கேடிஎம் பைக்கில் வலம் வர நினைத்து, அதற்கு அவர் போட்ட வேடமும், அதனால் நடந்த விளைவுகளும் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது. 


தன் குழந்தைகளுடன் இதற்கான முயற்சியில் இறங்கிய ஜி.பி.முத்துவுக்கு, பைக் ரேஸர்கள் போடும் ஆடை தரப்பட்டுள்ளது. அந்த ஆடையை அவர் அணிவதற்குள் பெரும்பாடு பட்டுள்ளார். அதன் பிறகு, அந்த ஆடையை அணிந்து நடந்து வரவே, கடும் சிரமப்பட்டு, ‛எனக்கு இந்த முயற்சி வேண்டவே... வேண்டாம்...’ என அடம்பிடிக்கிறார்.

அவரது மகன்கள், ‛அப்பா... சும்மா வாப்பா...’ என அவரை அதட்டி, ஒப்புக் கொள்ள வைக்கின்றனர். ஒருவழியாக பைக் இருக்கும் இடத்திற்கு வரும் ஜி.பி.முத்து, கேடிஎம் பைக்கை பார்த்ததும், ‛இதை எல்லாம் என்னால் ஓட்ட முடியாது’ என அடம்பிடிக்கிறார். ரேஸர் ட்ரெஸ் போட்டுக் கொண்டு, ஸ்கூட்டி தான் ஓட்டுவேன் என அடம்பிடிக்கிறார். 

நம்ம ஆளு கொஞ்சம் குட்டை. அதனால், அவரால் பைக்கில் ஏறுவதே சிரமமாக இருக்க, ஒரு நாற்காலியை போட்டு, அவரை பைக்கில் அமர வைக்க படாதபாடு படுகின்றனர், ஏற்பாட்டாளர்கள். தட்டுத்தடுமாறு ஒரு வழியாக அதில் ஏற முற்பட்டு, கீழே விழுந்த ஜி.பி.முத்துவை, அவரது குழந்தைகள் பார்த்து கிண்டலடித்து ரசித்துள்ளனர். 

‛அடப்பாவிகளா... நான் கீழே விழுந்துட்டேன்... நீங்க ரசிக்கிறீங்க...’ என வழக்கமான தன் பாணியில், குழந்தைகளை கடிந்து கொண்டு, அவரும் சிரித்து, நம்மையும் சிரிக்க வைக்கிறார், வழக்கம் போல ஜி.பி.முத்து. எது எப்படியோ, புது கெட்டப்பில் வந்த ஜிபி.முத்துவை பார்க்க கொஞ்சம் வித்தியாசமாக தான் இருந்தது. 

 

Continues below advertisement