துப்பாக்கி குண்டுகள் முழங்க காவல் துறை மரியாதையுடன் பாடகி வாணி ஜெயராமின் உடல் தகனம் செய்யப்பட்டது. 


தமிழ் சினிமாவின் மூத்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் நேற்று (04/02/2023) நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். இந்நிலையில் அவரது உடல் இன்று (05/02/2023) பெசண்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் காவல் துறை சார்பில் துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பின்னர் அவரது உடல் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.