இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்னையர் தினத்தை முன்னிட்டு கோலிவுட் முதல் பாலிவுட் திரை பிரபலங்கள் வரை தங்கள் அன்னைக்கு  வாழ்த்து பதிவிட்டு வருகிறார்கள். பிரபலங்கள் தங்கள் அன்னையைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்க்கலாம்


நயன்தாரா






தனது மனைவி நயன்தாராவுக்கு அன்னையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன். நயன்தாரா தனது இரு மகன்களுடன் விளையாடும் வீடியோக்களை வீடியோவாக பகிர்ந்துள்ளார் விக்னேஷ் சிவன் 


ஜோதிகா






அன்னை என்பவர் ஒரு குடும்பத்திற்கு முதுகெலும்பைப் போன்றவர். தனது குடும்பத்திற்காக எப்படி வேண்டுமானாலும் வளையக் கூடியவர் அதே நேரத்தில் தனது குடும்பத்தினருக்கு ஒரு தூணாக துணை நிற்கக் கூடியவர். குடும்பத்திற்காக தங்களை முழுமையாக அர்ப்பணிக்கும் அனைத்துப் பெண்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள். என்று ஜோதிகா தனது அன்னையுடன் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.


கஜோல்






பாலிவுட் நடிகை கஜோல் தனது அன்னையுடன் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். ”நம் இருவருக்கும் மட்டுமே புரியும் ஜோக்கிற்கு சிரிக்கும் பாரம்பரியத்தை நான் கைவிடமாட்டேன் அம்மா. அன்னையர் தின வாழ்த்துக்கள் ” என்று கஜோல் பதிவிட்டுள்ளார்


சைஃப் அலி கான்






பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் தனது அன்னை , மனைவி மற்றும் குழந்தைகள் என குடும்பத்துடன் புகைப்படம் வெளியிட்டு அன்னையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.


டைகர் ஷ்ராஃப்


பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷ்ராஃபின் மகன் டைகர் ஷ்ராஃப் தனது அன்னையுடன் புகைப்படம் பதிவிட்டு அன்னையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.


சஞ்சய் தத்






பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கருப்பு வெள்ளையில் தனது அன்னையின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். எல்லார் மீதும் அளவுகடந்த அன்பை செலுத்த தனக்கு சொல்லிக் கொடுத்தவர் தன் அம்மாதான் என்று அவர் பதிவிட்டுள்ளார்