TN Weather Update: பலத்த காற்றுடன் கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்?


தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக,  தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. மேலும் படிக்க..


Mettur Dam : மேட்டூர் அணையின் நீர் வரத்து 21 கன அடியில் இருந்து 33 கன அடியாக அதிகரிப்பு.


தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 33 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 21 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 33 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும் படிக்க..


CM MK Stalin: அன்பின் திருவுரு.. தன்னலம் கருதா சேவை.. அன்னையர் தினத்துக்கும், செவிலியர்களுக்கும் முதல்வர் வாழ்த்து


ஒவ்வொரு ஆண்டும் மே 12 ஆம் தேதி சர்வதேச செவிலியர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. செவிலியர்கள் மற்றும் அவர்களின் சேவைகளை கொண்டாடவும், கவுரவிக்கும் வகையில், இந்த நாள் கொண்டாடப்படுகிறது. ஒரு மருத்துவமனையில் மருத்துவர்களின் சேவை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதே அளவு முக்கியத்துவம் கொண்டது தான் செவிலியர்களின் சேவையும். மேலும் படிக்க...


TNEA 2024: பொறியியல் மாணவர் சேர்க்கை: 1 லட்சத்தைத் தொட்ட விண்ணப்பங்கள்- பலமடங்கு அதிகரிக்க வாய்ப்பு


பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 6 நாட்களில் 1 லட்சத்தைத் தொட்டுள்ளன. மாணவர் சேர்க்கைக்கு இன்னும் 20 நாட்களுக்கும் மேல் இருக்கும் நிலையில், சேர்க்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம். மேலும் படிக்க..


சவுக்கு சங்கர் மீது பாய்ந்த குண்டாஸ்


பிரபல யூ டியூபரான சவுக்கு சங்கர் யூ டியூப் சேனல் ஒன்றிக்கு அளித்த நேர்காணலில், காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்தை சவுக்கு சங்கர் தெரிவித்தாக கூறப்படுகிறது. இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுகன்யா புகார் அளித்தார். இதன்பேரில் சவுக்கு சங்கர் மீது பிறருக்கு தொல்லை தரும் வகையில் பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், ஒரு பெண்ணின் நாகரீகத்தை அவமதிக்கும் வகையில் பேசுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் கோவை மாநகர சைபர் க்ரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்நிலையில், இன்று சவுக்கு சங்கர் மீது குண்டாஸ் பாய்ந்தது.