✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Watch Video: புது ரெஸ்டாரண்ட் தொடங்கியாச்சு.. சீரியலை விட்டு விலக்கப்பட்ட பிரியங்கா நல்காரி தந்த அப்டேட்!

லாவண்யா யுவராஜ்   |  12 May 2024 02:34 PM (IST)

Priyanka Nalkari: பிரியங்கா நல்காரி தனது கணவருடன் சேர்ந்து புதிய ரெஸ்டாரண்ட் ஒன்றைத் தொடங்கியுள்ளார். அதன் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

பிரியங்கா நல்காரி

சன் டிவியில் ஒளிபரப்பான 'ரோஜா' சீரியல் கதாநாயகியாக சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரியங்கா நல்காரி. அந்த சீரியல் முடிவுக்கு வந்ததும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சீதா ராமன்' சீரியலில் நடித்து வந்த பிரியங்கா திடீரென சீரியலில் இருந்து விலக அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகை நடித்து வந்தார். 
 
 
 
 
சிறிய பிரேக்குக்கு பிறகு புதிதாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் துவங்கிய 'நளதமயந்தி' சீரியலில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். இந்நிலையில் திடீரென பிரியங்கா நல்காரி சீரியலில் இருந்து விலக போவதாகவும் ஸ்ரீநிதி அவருக்கு பதிலாக நடிப்பார் என்றும் அறிவிப்பு வெளியாகி வந்தது. 'நளதமயந்தி' சீரியலில் இணையப்போவதை ஸ்ரீநிதி உறுதிப்படுத்தி இருந்தார். இப்படிப்பட்ட சூழலில் பிரியங்கா நல்காரி “நான் சீரியலை விட்டு விலகவில்லை, ஷூட்டிங்காக அழைப்பு வரும் என காத்திருந்தேன். ஆனால் என்னிடம் எதுவும் சொல்லாமலேயே சீரியல் கதைக்களத்தின் ட்ராக்கை மாற்றிவிட்டார்கள். என்னுடைய கதாபாத்திரம் இறந்து போனதாகக் காட்டி உள்ளனர்” என்றும் குற்றச்சாட்டை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
பிரச்சினை இப்படி நடைபெற்றுக் கொண்டிருக்க, நடிகை பிரியங்கா நல்காரி புதிதாக ரெஸ்டாரண்ட் ஒன்றைத் தொடங்கியுள்ளார். மேலும் அவரது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன. 'நளதமயந்தி' சீரியலில் ஒரு ஹோட்டல் நடத்தும் ஒரு கேரக்டரில் நடித்து வந்தார் பிரியங்கா. தற்போது அதை நிஜத்திலும் நிகழ்த்தி காட்டிவிட்டார்.
 
 
'சீதா ராமன்' சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே காதலர் ராகுல் என்பவரை, மலேசியா கோயிலில் திருமணம் செய்து கொண்டார். பெற்றோர் இன்றி நடைபெற்ற அவர்களின் திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகின. கணவருடன் மலேசியாவில் செட்டிலாகி விட்டதால் இனி அடிக்கடி பயணம் செய்து வந்து நடிக்க முடியாது என்பதால் நடிப்பில் இருந்து விலகுவதாக தெரிவித்து இருந்தார்.
 
 
 
சில மாதங்களிலேயே பிரியங்கா தனது கணவர் ராகுல் உடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனைத்தையும் அகற்றியதாக செய்திகள் பரவ அவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள் என கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிரியங்கா நல்காரி தனது கணவருடன் சேர்ந்து புதிய ரெஸ்டாரண்ட் ஒன்றை துவங்கி அதன் பூஜை புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.  மேலும் பிரியங்கா தன்னுடைய யூடியூப் சேனலில் பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்படுவது மற்றும் பால் காய்ச்சுவதன் வீடியோவை போஸ்ட் செய்துள்ளார்.  மேலும் விரைவில் ரெஸ்டாரண்ட் பெயரை ரிவீல் செய்யும் புது விலாக் வீடியோவை பகிர்வதாகவும் பிரியங்கா  நல்காரி தெரிவித்துள்ளார்.
 
Published at: 12 May 2024 02:33 PM (IST)
Tags: Roja Watch Video Priyanka Nalkari seetha raman nala damayanthi Zee tamil
  • முகப்பு
  • பொழுதுபோக்கு
  • தொலைக்காட்சி
  • Watch Video: புது ரெஸ்டாரண்ட் தொடங்கியாச்சு.. சீரியலை விட்டு விலக்கப்பட்ட பிரியங்கா நல்காரி தந்த அப்டேட்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.