தனுஷ்  நடித்த கேப்டன் மில்லர் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் உள்ளிட்டு  பிப்ரவரி 9 ஆம் தேதி ஓடிடி தளங்களில் வெளியாகும் பிற  படங்களைப் பார்க்கலாம்.


கேப்டன் மில்லர்




அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படம் வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது. கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் , பிரியங்கா மோகன் , சந்தீப் கிஷன், ஷிவ ராஜ்குமார், அதிதி பாலன் , ஜெயபிரகாஷ், நிவேதா சதிஷ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள்., ஜி.வி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.


அயலான்




சிவகார்த்திகேயன் நடித்து ரவிகுமார் இயக்கிய அயலான் படம் அதே நாளில் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ரகுல் ப்ரீத், கருணாகரன், யோகிபாபு உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில்  நடித்துள்ளார்கள். ஏ ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏலியன் ஃபேண்டஸி படமாக உருவான அயலான் படம் உலகளவில் 50 கோடிக்கும் மேலாக வசூல் செய்தது. 


ஏற்கனவே கேப்டன் மில்லர் மற்றும் அயலான் ஆகிய இரு படங்களும் ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியாகின. இரண்டு படங்களுக்கு கடுமையான போட்டி நிலவிய சூழலில் தற்போது இரண்டு படங்களும் ஒரே நாளில் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கின்றன


இப்படிக்கு காதல்




பரத், ஜனனி ஐயர், பாண்டியராஜன் , பகவதி பெருமாள் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள இப்படிக்கு காதல் படம் வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி ஆஹா தமிழில் வெளியாகிறது. அரோல் கெரெல்லி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பரத் நடித்து கடந்த ஆண்டு வெளியான லவ் திரைப்படம் சரியாக வரவேற்பை பெறாத நிலையில் இந்தப் படம் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் அறிமுக நடிகர்கள் ரோஷன் கனகலா மற்றும் மானசா செளதரி நடித்துள்ள பப்பில்கம் படமும் அதே நாளில் இத்தளத்தில் வெளியாகிறது.


குண்டூர் காரம்




தெலுங்கில் த்ரி விக்ரம் ஸ்ரீனிவாஸ் - நடிகர் மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகி பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்த படம் “குண்டூர் காரம்”. தமன் இசையமைத்துள்ள இப்படத்தில் ஸ்ரீ லீலா, மீனாட்சி சௌத்ரி, பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், ஜெயராம், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து   தற்போது நெட்ஃப்ளிக்ஸின் இப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாகிறது.


பிற படங்கள்


பாலிவுட்டில் பாக்‌ஷாக் படம்  நெட்ஃப்ளிக்ஸின் வெளியாகிறது. ஜீ5 ஓடிடி தளத்தில் லந்தராணி மற்றும் கிச்சடி ஆகிய இரண்டு படங்கள் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாக இருக்கின்றன.




மேலும் படிக்க : Valentines Day : ஸ்ரீதர் முதல் கௌதம் மேனன் வரை... தமிழ் சினிமாவை காதல் படங்களில் ஆதிக்கம் செலுத்திய இயக்குநர்கள்


Vijay Anand: சினிமா ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி.. பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் காலமானார்