2023ஆம் ஆண்டு தமிழில் வசூல் ரீதியாகவும் விமர்சனரீதியாகவும் பல்வேறு படங்கள் லைம்லைட்டில் இடம்பெற்றன. அதேபோல் மலையாளத்தில் வெளியான ஒரு சில படங்கள் சர்வதேச அளவில் வரவேற்பைப் பெற்றன. மேலும் இதில் சில படங்கள் மிக சவாலான கதைக்களங்களை துணிச்சலாக கையாண்டிருந்தன. இந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி சிறந்த வரவேற்பைப் பெற்ற திரைப்படங்களின் பட்டியலைப் பார்க்கலாம்.
2018
ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் டொவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன், ஆசிப் அலி, லால், அபர்ணா பாலமுரளி மற்றும் கலையரசன் ஆகியவர்கள் நடித்து வெளியானத் திரைப்படம் 2018. 2018ஆம் ஆண்டு கேரளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளைப் பெற்றது. வசுல் ரீதியாகவும் கேரள திரைத்துறையில் இப்படம் ஒரு மைல் கல்லை எட்டியது.
இரட்டா
ஜோஜு ஜார்ஜ், அஞ்சலி, ஆர்யா சலீம் மற்றும் ஸ்ரீகாந்த் முரளி ஆகியவர்கள் நடித்து ரோஹித் எம்.எஸ் கிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் இரட்டா. ஒரு காவலரின் திடீர் மரணமும் அதைத் தொடர்ந்து நடக்கும் விசாரணையும் இப்படத்தின் மையக்கதை. க்ரைம் த்ரில்லராக அமைந்த இந்தப் படம் விமர்சன ரீதியாக கவணத்தை ஈர்த்தது.
ரோமாஞ்சம்
ஒரு பக்கம் சீரியஸான படங்கள் என்றால் மறுபக்கம் ஜாலியான சில படங்களும் ரசிகர்களை கவர்ந்துள்ளன. ஜீது மாதவன் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், அர்ஜுன் அசோகன், சஜின் கோபு, சிஜூ சன்னி, அபின் பினோ, அனந்தராமன் அஜய் மற்றும் அஃப்சல் ஆகியவர்கள் நடித்த ரோமாஞ்சம் திரைப்படம் இந்த ஆண்டு ட்ரெண்ட் செட்டராக அமைந்தது.
பாச்சுவும் அட்புத விளக்கும்
அகில் சத்யன் இயக்கத்தில் ஃபகத் ஃபாசில் மற்றும் அஞ்சனா ஜெயபிரகாஷ் இயக்கத்தில் வெளியான பாச்சுவும் அட்புத விளக்கும் திரைப்படம் ஒரு சுவாரஸ்யமான ரொமாண்டிக் காமெடி படமாக அமைந்தது.
கருடன்
அருண் வர்மா இயக்கத்தில் சுரேஷ் கோபி , பிஜு மேனன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கருடன். ஜினேஷ் எம் கதை எழுதி மிதுன் மேனன் தாமஸ் இந்தப் படத்திற்கு திரைக்கதை அமைத்துள்ளார்.
ஆர் டி எக்ஸ்
ஷேன் நிகம், ஆண்டனி வர்கீஸ் மற்றும் நீரஜ் மாதவ் உள்ளிட்டவர்கள் நடித்து வெளியான ஆக்ஷன் திரைப்படம் ஆர்.டி எக்ஸ். இந்தப் படத்தின் ஆக்ஷன் காட்சிகளுக்காக தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களை கவர்ந்தது.
காதல் தி கோர், கன்னூர் ஸ்குவாட்
கடந்த ஆண்டு நண்பகல் நேரத்து மயக்கம் படத்தைக் கொடுத்த மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி, இந்த ஆண்டு இரண்டு அற்புதமான படங்களில் நடித்துள்ளார். ஒரு பக்கம் குற்றம் , விசாரணை என விறுவிறுப்பாக செல்லும் கன்னூர் ஸ்குவாட் திரைப்படம், மறுபக்கம் உணர்ச்சிகரமான மிகவும் துணிச்சலான ஒரு படமாக சமீபத்தில் வெளியானது காதல் தி கோர் திரைப்படம்.