2017ஆம் ஆண்டு நடிகை கடத்தப்பட்ட  தாக்கப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப் நிரபராதி என கேரள முன்னாள் காவல்துறை அதிகாரி ஸ்ரீலேகா தெரிவித்துள்ளார்.


யூடியூப் வீடியோ :


கேரளா மட்டுமல்ல ஒட்டுமொத்த தென்னிந்தியாவையும் தாக்குதலுக்கு உள்ளாக்கிய வழக்கு நடிகையின் கடத்தல் வழக்கு. இந்த வழக்கில் நடிகர் திலீப்பும் அவரது மனைவியும்தான் முக்கிய குற்றவாளி என கூறப்பட்டு வரும் நிலையில் ,  கேரள முன்னாள் காவல்துறை அதிகாரி ஸ்ரீலேகா“தாக்குதல் வழக்கில் திலீப் நிரபராதியா?” என்ற தலைப்பில் யூடியூப் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.


அந்த வீடியோவில், அவர் 100 சதவீதம் திலீப் நிரபராதி என்றும், இந்த வழக்கில் அவருக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றும், அவரை இந்த வழக்கில் இழுத்ததே காவல்துறையின் தவறு என்றும் தெரிவித்துள்ளார்.




அவர் கூறியதாவது :


திலீப் ஒரு நிரபராதி என கூறிய அவர் எனக்கு காவல்துறை மீது நம்பிக்கை உள்ளது, அவர்கள் தவறு செய்திருந்தால், அதை ஏன் அவர்களால் ஒப்புக்கொள்ள முடியாது? ஏன் இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறார்கள்?”இந்த வழக்கில் குற்றவாளிகளாக இருக்கும் ஐந்து முதல் ஆறு பேர் திலீப்பைப் பின் தொடராமல் இருந்திருந்தால் இந்நேரம் காவல்துறையால் பிடிபட்டிருப்பார்கள் என்றும் ஸ்ரீலேகா கூறுகிறார்.  


விசாரணையின் போது அவர் சந்தேகங்களை எழுப்பிய போதெல்லாம், அவரது மூத்த அதிகாரிகளால் அவர் அமைதியாக இருந்தார். அவருக்கு எதிரான பெரும்பாலான ஆதாரங்கள் பல்சர் சுனியால் புனையப்பட்டவை என்றும் அவர் குற்றம் சாட்டினார். சுனி ஒரு மிரட்டி பணம் பறிக்கும் கும்பலைச் சேர்ந்தவர் என்பதையும், அவர் சிறையில் இருந்தபோது அவருக்கு மொபைலைப் பாதுகாக்க அவர்கள் உதவியதாக காவல்துறையிடம் குற்றம் சாட்டினார். என்றும் தெரிவித்துள்ளார்.


வழக்கு விவரம் :


 2017 ஆம் ஆண்டு தனது ஷூட்டிங்கை முடித்துவிட்டு வீடு திரும்பிய நடிகையை 5 பேர் கொண்ட கும்பல் கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட 5 பேரும் காவல்துறையினராக கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் திலீப்பின் சகோதரர் மற்றும் மனைவி காவ்யா மாதவனிடமும் விசாரணை நடத்தப்பட்டது. திலீப் சில நாட்கள் சிறையில் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.