கரூர் நகரப் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பண்டரிநாதன், ரகுமாய் தாயார் ஆலயத்தில் ஆஷாட ஏகாதேசி விழாவை முன்னிட்டு ஸ்ரீ பண்டரிநாதன், ரகுமாய் தாயார் உற்சவர் மற்றும் மூலவருக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம் ,தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து ஸ்ரீ பண்டரிநாதன், ரகுமாய் தாயாருக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து, வெள்ளி கிரீடம் அறிவித்த பிறகு, ஆலயத்தின் பூசாரி சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன், மகா தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர் ஸ்ரீ பண்டரிநாதன் மற்றும் ரகுமாய் தாயாரை ஆலயம் மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் படி செய்தனர்.
தொடர்ந்து ஆண் பக்தர்கள் தங்களது மேலாடையை நீக்கிவிட்டு, ஒருவர் பின் ஒருவராகவும், பெண் பக்தர்கள் ஒருவர்க்கு பின் ஒருவராகவும் ஸ்ரீ பண்டரிநாதர் ஆலய கருவறைக்குச் சென்று சுவாமியை தொட்டு தரிசனம் செய்து வருகின்றனர். ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆஷாட ஏகாதேசி விழாவை முன்னிட்டு பக்தர்கள் கருவறைக்கு சென்று சுவாமி தொட்டு தரிசிக்கும் நிகழ்ச்சி 100 ஆண்டுகளுக்கு மேல் கரூர் பண்டரிநாதன் ஆலயத்தில் நடைபெற்று வருகிறது என நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் பல்வேறு பெருமாள் கோவில்களில் இந்த வழிபாடு நடைபெற்று வந்தாலும், தொடர்ந்து 100 ஆண்டு காலமாக ஆஷாட ஏகாதேசி முன்னிட்டு கருவறைக்கு சென்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்ற நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக கருவறைக்கு செல்ல ஆலயத்தின் சிவாச்சாரியார், பட்டாச்சாரியார், கோவில் பூசாரிகள் மட்டுமே கருவறைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆஷாட ஏகாதேசி முன்னிட்டு கரூர் பண்டரிநாதன் ஆலயத்தில் அனைத்து பக்தர்களும் கருவறைக்குச் சென்று சுவாமி தொட்டு தரிசிக்கலாம் என்ற நிகழ்வு பலரையும் ஆச்சரியத்தில் ஏற்படுத்தியுள்ளது. காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் ஆலயம் வரும் அனைத்து பக்தர்களுக்கும் சிறப்பான முறையில் பிரசாதம் வழங்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, இரவு உற்சவர் பண்டரிநாதன், ரகுமாயி தாயார் திருவீதி உலாவும் நடைபெற்றது. ஆலயத்தில் நடைபெற்ற ஆனி மாத ஏகாதேசி விழா கருவறைக்குச் சென்று பக்தர்கள் சுவாமியை தொட்டு தரிசிக்கலாம் என்ற நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்துள்ளனர். இந்த சிறப்பு ஆயுத நிகழ்ச்சியில் கரூர் நகர மட்டுமல்லாது பல்வேறு வெளியூர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்