இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் எப்போதாவது வாய் திறப்பவர். அவர் வாய் திறந்தால், அதில் வரும் வார்த்தைகள் மிகவும் கவனமாகவும், கவனிக்கும் படியாகவும் இருக்கும். அந்த வகையில் இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், அவர் கூறியுள்ள கருத்துக்கள் ஆச்சரியம் தருபவையாக இருந்தன. இதோ அந்த பேட்டி...




‛‛ஒரு இசைக்கலைஞன் என்றால், அவன் மதுகுடிப்பான், ட்ரெக்ஸ் எடுப்பான், பெண்களோடு சுற்றுவான், நலல பழக்கங்கள் இருக்காது என்கிற தோற்றத்தை உருவாக்கிவிட்டனர். தலைமுறை இடைவெளியில் சிலர் அதற்கு காரணமாகவும் இருந்துள்ளனர். இசைத்துறைக்கு ஒருவர் போனாலே, ஒரு மாதிரி பார்ப்பார்கள். இளையராஜா சார், அதை உடைத்தார். ஒரு சாமியார் மாதிரி இருப்பார். மது குடிக்க மாட்டார், சிகரெட் பிடிக்க மாட்டார். எந்த கெட்ட பழக்கமும் இளையராஜா சாரிடம் இருக்காது. தன்னாலேயே ஒரு மரியாதை அவரை பார்த்து வரும். 


அந்த விசயம், என்னை ரொம்ப பாதித்தது. அவரை பார்த்தாலே பலரும் நடுங்குவார்கள். அந்த அளவிற்கு மரியாதை இருக்கும். நான் குருக்களிடம் இருந்து நல்லதை நிறைய கற்றுள்ளேன். ஒரு கலைஞனின் உள்ளே இருக்கும் ஆன்மீக உணர்வை உணர்ந்தால், எதையும் நன்றாக செய்ய வேண்டும் என்கிற எண்ணம் வரும். அதை நேர்த்தி வரும் வரை நாம் உழைக்க வேண்டும். நான் அவ்வாறு உழைத்த போது தான், என்னுடைய தொழில் இசை என்பதை நான் உணர்ந்தேன். என் அம்மாவும் அதை தான் கூறினார். ‛இது தான் உன் வேலை...’ என. 


எல்லா இசையமைப்பாளருக்கும் ஒரு தனித்தன்மை இருக்கும். ஜெய்ஹோ... பாடல் இந்திய வார்த்தைகள் இருக்கும். ஆனால் ஜப்பானிய ரீதம், ஸ்பேனிஸ் இருக்கும். கொலை வெறி பாடலில் கூட ஆங்கில வார்த்தை இருக்கும், ஆங்கில ரிதம் இருக்கும். அனைவரையும் திருப்திபடுத்த வேண்டும் என்பதே பிரதானம்.




பாடலுக்கு வரிகளை விட கான்ஸப்ட் முக்கியம். உதாரணம் மன்னிப்பாயா பாடல். மன்னிப்பாயா பாடல் ரெக்கார்டு செய்தது கெளதம் மேனனுக்கு தெரியாது. நானும் தாமரையும் சைலண்டாக ரெக்கார்டு செய்தோம். ரெக்கார்டு செய்துவிட்டு அவரிடம் போட்டு காட்டுவோம்... அவருக்கு பிடித்தால் வைத்துக் கொள்வோம் என்றோம். அவருக்கு சர்ப்ரைஸ் ஆக தான் அந்த பாடலை போட்டுக் காட்டினோம். மன்னிப்பாயா என்பது தான் கான்ஸ்டெப். அதை வைத்து பாடல் வரிகளை உருவாக்கினோம். பின்னர் அதை கெளதமிடம் போட்டு காட்டினோம்... அவருக்கு ரொம்ப பிடித்துவிட்டது. அதற்கு காரணம் கான்ஸப்ட்!’’


என்று அந்த பேட்டியில் ஏ.ஆர்.ரஹ்மான் பேசியுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண