தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகை அபிராமி வெங்கடாச்சலம். நடிகை மற்றும் மாடலுமான இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரைப்படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், நடிகை அபிராமிக்கு செயின்ட் மதர் தெரசா பல்கலைகழகத்தின் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. நடனக்கலைக்காக இவருக்கு இந்த பட்டம் வழங்கப்பட்டுள்ளது.




மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்ற பிறகு, அபிராமிக்கு மாடலிங் துறையில் நிறைய வாய்ப்புகள் கிடைத்தது. இதையடுத்து, 2016ம் ஆண்டு அவர் கன்ட்ரோல் ஆல்ட் டெலிட் என்ற வெப்சீரிசில் நடித்தார், அதன்மூலம் தனது நடிப்புலக வாழ்க்கையைத் தொடங்கிய அவர், சன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பணியாற்றினார்.






பின்னர், ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் நோட்டா படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். பின்னர், களவு என்ற படத்தில் நடித்த பிறகு பிக்பாஸ் தொடரில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி மூலமாக தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமானார். பின்னர், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் பாத்திமா பானு என்ற வலுவான கதாபாத்திரத்தில் நடித்தார்.




இந்த படம் ஏற்கனவே இந்தியில் வெளியாகி மாபெரும் வரவேற்பபை பெற்ற பிங்க் திரைப்படத்தின் மறு ஆக்கம் என்பதாலும், எச்.வினோத் – அஜித் கூட்டணி என்பதாலும் நேர்கொண்ட பார்வைக்கு பிறகு அபிராமியின் மார்க்கெட் அதிகரித்தது. தற்போது, துருவ நட்சத்திரம், நெருஞ்சி, கஜன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவை தவிர, வெப்சீரிஸ்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.  


மேலும் படிக்க : கடந்த ஆண்டு அமேசானுக்கு எதிர்ப்பு..! இந்த ஆண்டு அமேசானுக்காக நடிப்பு..! நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு ஆளான பாரதிராஜா..!


மேலும் படிக்க : Vijay Antony on Twitter: இந்த உலகத்தையே பாம் போட்டு அழிச்சுடுங்க...! விரக்தியின் உச்சத்தில் விஜய் ஆண்டனி..!



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண