First 100cr Films: ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படம் ரூ.500 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிசில் வசூலை வாரி குவித்தது. அதன் பின்னர் பான் இந்தியா படமாக ரிலீசான ஷாருக்கான் நடித்த ஜவான் படம் உலகளவில் ரூ.1000 கோடியை நெருங்கியுள்ளது. அடுத்ததாக மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் விஜய் நடிக்கும் லியோ, சூர்யாவின் கங்குவா, இந்தியன் 2 படங்கள் வசூலில் சாதனை படைக்கும் என கணிக்கப்படுகிறது. இப்படி மாஸ் ஹீரோக்களின் படங்கள் கலெக்‌ஷனில் போட்டிபோட்டு சாதனை படத்து வரும் நிலையில் தமிழ் சினிமாவில் சில படங்கள் ரூ. 100 கோடி வரை வசூலித்துள்ளன. 


அந்த வரிசையில் ரஜினி, கமல்ஹாசன், விஜய், சூர்யா, சிவகாத்திகேயன், விஷாக் உள்ளிட்ட நடிகர்களின் மெகா ஹிட்டான படங்கள் ரூ. 100 கோடிக்கு வசூலாகியுள்ளன. அதில், ரஜினியின் சிவாஜி, கமலின் தசவதாரம், விஜய்யின் துப்பாக்கி, காத்திக் நடித்த கைதி என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. 2007ம் ஆண்டு ரஜினி, ஸ்ரேயா, விவேக், சுமன் நடித்திருந்த சிவாஜி படம் விமர்சன ரீதியாகவும், வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படம் பாக்ஸ் ஆபிசில் ரூ.160 கோடி வரை வசூலானதாக கூறப்படுகிறது. அடுத்ததாக 2008ம் ஆண்டு கமல்ஹாசன், அசின், மல்லிகா ஷெராவத், நாகேஷ் நடிப்பில் வெளிவந்த தசாவதாரம் படம் பெரிய அளவில் ஹிட் அடித்தது. இதில் 10 கேரக்டர்களின் கமல் நடித்து இருப்பார். இந்த படமும் பாக்ஸ் ஆபிசில் ரூ. 100 கோடி வசூலானதாக கூறப்படுகிறது. 


2012ம் ஆண்டு விஜய், காஜல் அகர்வால், வித்யூத், ஜெயராம் நடிப்பில் வெளிவந்த துப்பாக்கி படம் நல்ல வரவேற்பை பெற்றது. விஜய்யின் ஆக்‌ஷன் காட்சிகள் பேசப்பட்டது. இந்த படம் பாக்ஸ் ஆபிசில் ரூ.121 கோடி வரை வசூலானதாக கூறப்படுகிறது. 2013ம் ஆண்டு அஜித், ஆர்யா, டாப்சி, நயன்தாரா, ரானா ரகுபதி நடிப்பில் வெளிவந்த ஆரம்பம் படம் விமர்சனம் மட்டும் இல்லாமல், வசூலிலும் சாதனை படத்தது. ஒட்டுமொத்தமாக ரூ.124 கோடி வரை ஆரம்பம் படம் வசூலானது என தகவல் வெளியாகியது.


2011ம் ஆண்டு சூர்யா, ஜானி, ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளிவந்த 7ம் அறிவு படம் மெகா ஹிட்டடித்தது. படத்தில் இடம்பெற்றிந்த போதிதர்மர் கேரக்டர் பெரிய அளவில் டிரெண்டானது. இந்த நிலையில் ஏழாம் அறிவு படம் வசூலில் ரூ.100 கோடியை தாண்டியதாக கூறப்படுகிறது. இதேபோன்று விக்ரம் நடிப்பில் வெளிவந்த ஐ, சிம்பு நடித்த மாநாடு, சிவகார்த்திகேயனின் டாக்டர், கார்த்தி நடித்த கைதி படங்களும், அண்மையில் விஷால் நடிப்பில் வெளிவந்த மார்க் ஆண்டனி படமும் வசூலில் ரூ.100 கோடியை எட்டியதாக கூறப்படுகிறது. 






மேலும் படிக்க: Trisha: இதோட நிறுத்திக்கோங்க... சியர்ஸ்.. திருமண வதந்திகளுக்கு லியோ பட பாணியில் ஃபுல்ஸ்டாப் வைத்த த்ரிஷா!


October Cine Updates: தலைவர் முதல் தனுஷ் வரை... அக்டோபரில் குவியும் டாப் டக்கர் ஹீரோக்களின் அப்டேட்டுகள்!