வருடா வருடம் கோலாகலமாக நடைபறும் ஃபிலிம் ஃபேர் விருதுகள், இந்த முறை மும்பையில் நடைபெறவுள்ளது. இதில், கங்குபாய் கத்யாவாடி மற்றும் தி காஷ்மீர் பைல்ஸ் ஆகிய படங்கள் அதிக வகைகளில் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
68-வது ஃபிலிம்ஃபேர் விருதுகள்:
1954ஆம் ஆண்டு முதல் நடைப்பெற்று வரும் ஃபிலிம் ஃபேர் விருதுகள், 68-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர்-நடிகை உள்ளிட்ட 19 பிரிவில் இந்த வருடத்தின் ஃபிலிம் ஃபேர் விருதுகள் நடைபெற இருக்கிறது.
மும்பையில் உள்ள ஜியோ சர்வதேச மையத்தில் வரும் 27-ஆம் தேதியன்று இந்த வருடத்தின் ஃபிலிம் ஃபேர் விருதுகள் நடைபெறவுள்ளன. இதனை, முதன் முறையாக பாலிவுட் நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்குகிறார். அவருடன் சேர்ந்து ஆயுஷ்மான குரானா மற்றும் மனீஷ் பால் ஆகியோரும் தொகுத்து வழங்குகின்றனர். இதில், பாலிவுட்டின் பல்வேறு பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர். இந்த வருடம் விருது வழங்குவதற்காக பரிந்துரைக்கப்பட்டு படங்கள் மற்றும் நடிகர்-நடிகைகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், அதிகமாக ஆலியா பட்டின் கங்குபாய் கத்யாவாடி திரைப்படமும் விவேக் அக்னிஹோத்ரியின் காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படமும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அதிக முறை தேர்வு செய்யப்பட்டுள்ள படங்கள்:
பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம், கங்குபாய் கத்தியவாடி. இந்த படத்தில் நடித்ததற்காக ஆலியா பட்டிற்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டு கிடைத்தது. அது மட்டுமன்றி, சில மாநில விருதுகளையும் இப்படம் வென்றது. தற்போது ஃபிலிம் ஃபேர் விருதிற்காகவும் இப்படம் பல பிரிவுகளில் பரிந்துரைக்க பட்டுள்ளது. சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த நடிகை, சிறந்த புதுமுக நடிகர் என மொத்தம் 10 பிரிவுகளின் கீழ் இப்படம் விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதே போல, பல சர்ச்சைகளை கிளப்பிய காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படமும் சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த நடிகர் என மொத்தம் 6 பிரிவுகளில் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஃபிலிம்ஃபேர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள படங்களின் சில முக்கிய பட்டியல்கள்
சிறந்த படத்திற்கான விருது:
- பதாய் தோ (Badhaai Do)
- பூல் புலாயா 2 (Bhool Bhulaiyaa 2)
- பிரம்மாஸ்திரா (Brahmastra Part One: Shiva)
- கங்குபாய் கத்தியவாடி (Gangubai Kathiawadi)
- தி காஷ்மீர் ஃபைல்ஸ் (The Kashmir Files)
- உன்சாய் (Uunchai)
சிறந்த இயக்குநருக்கான விருது:
- பூல் புலாயா படத்திற்காக அனீஸ் பஸ்மீஸ்
- பிரம்மாஸ்திரா படத்திற்காக அயன் முகர்ஜீ
- பதாய் தோ படத்திற்காக ஹர்ஷ்வர்தன் குல்கர்னி
- கங்குபாய் கத்தியவாடி படத்திற்காக சஞ்சய் லீலா பன்சாலி
- உன்சாய் படத்திற்காக சூரஜ் ஆர். பார்ஜாத்யா
- தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்காக விவேக் அக்னிஹோத்ரி
சிறந்த படம் (விமர்சகர்களின் தேர்வு):
- பதாய் தோ படத்திற்காக ஹர்ஷ்வர்தன் குல்கர்னி
- பேதியா படத்திற்காக அமர் கெளஷிக்
- ஜுந்த் படத்திற்காக நாகராஜ் மஞ்சுளே
- ராக்கெட்டரி படத்திற்காக மாதவன்
- வாத் படத்திற்காக ஜாஸ்பல் சிங் மற்றும் ராஜீவ் பர்ன்வால்
சிறந்த நடிகருக்கான தேர்வு
- த்ரிஷ்யம் 2 படத்திற்காக அஜய் தேவ்கன்
- உன்சாய் படத்திற்காக அமிதாப் பச்சன்
- தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்காக அனுபம் கேர்
- விக்ரம் வேதா படத்திற்காக ஹ்ரித்திக் ரோஷன்
- பூல் புலாயா படத்திற்காக கார்த்திக் ஆர்யன்
- பதாய் தோ படத்திற்காக ராஜ்குமார் ராவ்
சிறந்த நடிகைக்கான விருது
- கங்குபாய் கத்தியாவாடி படத்திற்காக ஆலியா பட்
- பதாய் தோ படத்திற்காக பூமி பெட்நேக்கர்
- மிலி படத்திற்காக ஜான்வி கபூர்
- லால் சிங் சத்தா படத்திற்காக கரீனா கபூர்
- பூல் புலாயா படத்திற்காக தபு
மேற்கூறியவை மட்டுமல்லாமல், சிறந்த துணை நடிகைக்கான விருது, சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருது என பல பிரிவுகளிலும் பல படங்கள் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.