திரை துறையில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்களையும் ‘Casting couch' எனப்படும் வாய்ப்பு தருவதற்கு முன்பு பாலியல் தொந்தரவு செய்யும் செயல் இருந்து வருகிறது. இது குறித்து அவ்வப்போது சில நடிகர்கள் வெளிப்படையாக சொல்லி வந்தாலும், பெரும்பாலும் திரைக்கு பின்னால் நடக்கும் விஷயங்கள் பதிவு செய்யப்படாமல் இருக்கிறது. இந்நிலையில், தெலுங்கு திரைத்துறையில் இருக்கும் பிரச்னைகளை சுட்டி காட்டி இருக்கிறார் பிரபல நடிகை அனுஷ்கா.
2020-ம் ஆண்டு, ‘நிஷப்தம்’ என்ற திரைப்படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த அனுஷ்காவிடம் திரைத்துறையில் அவர் சந்திக்கும் பிரச்னைகள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, “தெலுங்கு சினிமா துறையில் வாய்ப்பு தருவதற்கு முன்பு தொந்தரவு செய்யும் பிரச்னைகள் இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், எனக்கு அப்படியொரு பிரச்னை இருந்ததில்லை. ஏனென்றால், எதையும் நேர்முகமாக சந்தித்துவிடுவேன். வெளிப்படையாக பேசிவிடுவேன். இந்த பிரச்னைகளை சமாளிப்பது அந்தந்த நடிகையின் கையில் இருக்கிறது. குறுக்கு வழியில் பிரபலமடைந்து சட்டென்று மறைந்துவிடும் ஆசையா அல்லது நேர் வழியில் சென்று காலத்திற்கு பேசும் வகையில் பணி செய்ய வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டும்” என தெரிவித்திருந்தார்.
தென்னிந்திய சினிமாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவரான அனுஷ்கா, திரைத்துறையில் 16 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். முன்னணி நடிகையான அனுஷ்காவுக்கு டோலிவுட், கோலிவுட், மாலிவுட், சாண்டல்வுட் என நான்கு மாநிலங்களிலும் ரசிகர்கள் உள்ளனர். சினிமா துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைப் பற்றி வெளிப்படையாக பேசிய நடிகைகளில் ஒருவராக அனுஷ்கா தனித்து நிற்கிறார். முன்னதாக, சமந்தா இது குறித்து பேசி இருந்தார். திரைத்துறையில் இருக்கும் நல்ல விஷயங்களை பார்த்து அடுத்தக்கட்ட வேலைகளில் முன்னேறி கொண்டே இருக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்