பிரபல திரைப்பட விமர்கரான ப்ளூ சட்டை மாறன் வலிமை படத்தில் நடிகர் அஜித் பாடல் ஒன்றிற்கு ஆடியிருந்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அதில், “ பரோட்டாவிற்கு மாவு பிசையும் இந்த டான்ஸை தியேட்டரில் சிரிக்காமல் பார்த்தவர்கள் யார்? என்று பதிவிட்டிருந்தார். இதை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்த தயாரிப்பாளர் தனஞ்செயன், “ படத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லாத ஒருவர், இப்படியான ஒரு கமெண்டை பதிவிட்டிருப்பது என்னை மிகவும் ஏமாற்றம் அடைய செய்தது மட்டுமல்லாமல், கோபமடையவும் செய்திருக்கிறது.
அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். இதை நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் ஒரு நல்ல மனிதராக இல்லை என்றாலும் பராவாயில்லை. குறைந்தது ஒழுக்கமான மனிதராக இருக்க வேண்டும். இதை அவர் புரிந்துகொள்வார் என்று நம்புகிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார். இந்தப்பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிகர் அஜித் நடித்த வலிமை திரைப்படம் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியது. படம் மக்களிடையே கலவையான விமர்சனங்கள் வெளியான நிலையில், முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் வலிமைத்திரைப்படம் 35ல் இருந்து 40 கோடி ரூபாய் வசூலாகி இருப்பதாக தகவல் வெளியானது. முதல் நாள் முடிவில், உலக அளவில் சேர்த்து பார்த்தால் வலிமைத்திரைப்படம் மொத்தம் 48-ல் இருந்து 50 கோடி ரூபாய் வசுலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மூன்றாவது நாள் முடிவில் உலக அளவில் 100 கோடி ரூபாய் வசூலாகி சாதனைப்படைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதில் 60% வசூல் தமிழ்நாட்டில் இருந்து வசூலாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை அஜித் திரைப்படங்கள் குவித்த வசூல் வேட்டையில், 3 நாட்களில் 100 கோடி ரூபாயை அள்ளி இருக்கும் முதல் படம் ‘வலிமை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்