விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 5 - 29-ஆம் தேதி எபிசோடில், கிராமத்தாரா நகரத்தாரா பட்டிமன்றம் நடந்தது. அதில் ஆளாளுக்கு பல விஷயங்களைப் பேசியது செம்ம எண்ட்டர்டெய்ன்மெண்ட். அதில் உணவு விஷயத்தில் கிராமத்தாரும், பிக்பாஸ் ஆட்டம் புரிந்து விளையாடுவதில் நகரத்தாரும் இசையால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கிராமத்தாரா, நகரத்தாரா பட்டிமன்றம் போய்க்கொண்டிருக்கும்போது நாணயங்களைப் பற்றிய பேச்சை ஆரம்பித்தார் சுருதி. தாமரை பொங்கியெழுந்து மீண்டும் சாமியாடத் தொடங்கிய பின்புதான் அனைவரும் அமைதியானார்கள். தாமரையை அடக்கி வாசிக்கச் சொல்லி ராஜு கொடுத்த அட்வைஸ் ஸ்வீட்டான விஷயம்.


ஆனால் வீக்கெண்ட்டின் குறும்பட ஷோவுக்காக எல்லாரும் காத்திருக்கிறார்கள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது