இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today December 22, 2024: 


அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்....



மேஷ ராசி

 

நெருக்கமானவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். கற்பனை சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். தந்தை வழியில் ஒத்துழைப்பான சூழல் அமையும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் திருப்திகரமான சூழ்நிலை ஏற்படும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். பிரயாணம் நிறைந்த நாள்.

 

ரிஷப ராசி

 

வியாபார பணிகளில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். சிற்றின்ப செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். எதிலும் சிக்கனத்துடன் செயல்படுவீர்கள். வெளிவட்டாரங்களில் உங்களின் செல்வாக்கு மேம்படும். புத்திக்கூர்மையை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.

 

மிதுன ராசி

 

புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். எதையும் சமாளிக்கும் மனோபலம் உண்டாகும். இடது காது தொடர்பான பிரச்சனைகள் குறையும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். நவீன யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். அமைதி நிறைந்த நாள்.

 

 கடக ராசி

 

குறுகிய பயணங்கள் மூலம் புத்துணர்ச்சி அடைவீர்கள். சொத்துப் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வியாபாரத்தில் புதிய யுத்திகள் கைகூடும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வங்கிப் பணிகளில் சாதகமான சூழல் ஏற்படும். சிந்தனை நிறைந்த நாள்.

 

 சிம்ம ராசி

 

மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொதுமக்கள் பணிகளில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கடினமான விசயங்களையும் எளிமையாக புரிந்து கொள்வீர்கள். மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். தோற்றப்பொலிவு மேம்படும். பாராட்டு நிறைந்த நாள்.


 

 

 கன்னி ராசி

 

வாகனப் பயணங்களில் தகுந்த ஆவணங்களில் கவனம் வேண்டும். உடலில் ஒருவிதமான சோர்வு மூலம் சுறுசுறுப்பின்மை உண்டாகும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வர்த்தக பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். நன்மை நிறைந்த நாள்.

 

 துலாம் ராசி

 

உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். கல்வியில் ஆர்வமின்மை ஏற்படும். ஆன்மிக குருக்களின் ஆலோசனைகள் தெளிவினை உருவாக்கும். புதிய தொழில்நுட்பக் கருவிகளில் கவனம் வேண்டும். விதண்டாவாத பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எழுத்துத் துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். சோதனை விலகும் நாள்.

 

விருச்சிக ராசி

 

வரவுகள் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும். பேச்சுகளால் புதிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். வியாபார பணிகளில் லாபம் உண்டாகும். கற்றல் திறனில் சில மாற்றம் ஏற்படும். எதிலும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியாகவும் செயல்படுவீர்கள். வியாபாரப் போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். அனுபவ அறிவால் சில முடிவுகளை எடுப்பீர்கள். ஆக்கப்பூர்வமான நாள்.

 

தனுசு ராசி

 

தொழில்நுட்பக் கருவிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வங்கிப் பணிகளில் விவேகம் வேண்டும். தனிப்பட்ட இலக்குகள் உருவாகும். திட்டமிட்ட செயல்களில் எண்ணிய முடிவுகள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் மாற்றமான சூழல் உண்டாகும். அரசு தொடர்பான காரியங்களில் இருந்துவந்த இழுபறி குறையும். சாதனை வெளிப்படும் நாள்.

 

மகர ராசி

 

மனதில் தேவையில்லாத சிந்தனைகளை குறைத்துக் கொள்வதன் மூலம் புத்துணர்ச்சி ஏற்படும். உத்தியோக பணிகளில் மறைமுக சூழ்ச்சிகளை வெற்றி கொள்வீர்கள். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். கடன் முயற்சிகளில் விவேகம் வேண்டும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். எதிர்பாராத திடீர் திருப்பங்கள் உண்டாகும். சிந்தித்துச் செயல்படவேண்டிய நாள்.

 

கும்ப ராசி

 

தம்பதிகளுக்கு இடையே புரிதல் ஏற்படும். மற்றவர்கள் செயலால் மனதில் மாற்றம் ஏற்படும். கடன் விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருக்கவும். வியாபாரத்தில் அலைச்சல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். தாமதம் நிறைந்த நாள்.

 

மீன ராசி

 

சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களுடன் பயணங்கள் சென்று வருவீர்கள். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன், மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். சாந்தம் நிறைந்த நாள்.