மார்கழி மாத்தில் கண்ணபிராணை போற்றி, 30 நாட்களும் 30 பாடல்களை இலக்கியம் மிக்க, திருப்பாவையை ஆண்டாள் இயற்றியுள்ளார்.


தோழியை எழுப்பும் ஆண்டாள்:


சூடி கொடுத்த சுடர் கொடியான ஆண்டாள், 7வது பாடல் மூலம் காலை பொழுது நிகழ்வை, தமிழ் வார்த்தைகளை கொண்டு அழகான காட்சியாக வடிவமைத்திருக்கிறார்.


ஆறாவது பாடல் முதல் தோழிகளை எழுப்புவது போன்ற பாடல்களை இயற்றியுள்ள ஆண்டாள், 7வது பாடல் மூலம், அதிகாலை பொழுதின்போது தோழியின் வீட்டைச் சுற்றி நிகழும் நிகழ்வை சுட்டி காட்டி தோழியை எழுப்புகிறார்.


பாடல் விளக்கம்:


கீச்சு கீச்சு என்று பறவை எழுப்பும் சத்தம் கேட்கவில்லையா அறிவில்லாத பெண்ணை என உரிமையுடன் தோழியை கண்டித்து எழுப்புகிறாள்.


மேலும், உன் வீட்டில் உன் தாயார், தயிர் கடையும் சத்தமும், தயிர் கடையும் போது கழுத்தில் அணிந்திருந்த ஆபரணங்கள் சத்தமும் கேட்கவில்லையா…


இதன் மூலம், அக்காலத்து ஆயர் குலத்து பெண்கள், காலையில் செய்யக்கூடிய தொழிலை தெரிந்து கொள்ளலாம்.


கண்ணனை பெருமை குறித்து, இக்காலை வேலையில் பாடுவதற்கு நீ வரத்தான் வேண்டும். சரி, நீ இதையெல்லாம் கேட்டு, வேண்டும் என்றே நீ எழாமல் தூங்குவது போல் நடிக்கிறாய;, பிரகாசமான முகத்தை உடையவளே, எல்லாரயும் காலையில் எழுப்பி கூப்பிட்டு செல்வதாக, நீ சொன்னாயே, சீக்கிரம் எழுந்து வா என எழுப்புகிறார்


இப்பாடலில், இயற்கையின் சத்தம்,தோழிகளுக்கிடையே நிகழும் உரையாடல், காலை பொழுதினிலே நிகழும் காட்சியை கண் முன்னே கொண்டு வந்து, பாடல் வழியாக அழகாக ஆண்டாள் காட்சிப்படுத்தியுள்ளார்



திருப்பாவை பாடல்- 7


கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து


பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே!


காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து


வாச நறுங்குழ லாய்ச்சியர் மத்தினால்


ஓசைப்படுத்த தயிரரவம் கேட்டிலையோ?


நாயகப் பெண்பிள்ளாய்! நாரா யணன்மூர்த்தி


கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?


தேச முடையாய்! திறவேலோ ரெம்பாவாய். 


பக்தி இயக்கம்:


கி.பி ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான காலத்தை பக்தி இயக்க காலம் என்று அழைப்பர். ஏனென்றால் இக்காலக்கட்டத்தில் பக்தி இலக்கியங்கள் பல உருவாகின என்றும், குறிப்பாக சைவர்களான நாயன்மார்களும், வைணவர்களான ஆழ்வார்களும் இறைவனை போற்றி பல பாடல்கள் இயற்றினர். தமிழுக்கு பங்காற்றியதில், பக்தி இலக்கியங்களுக்கும் பெரும் பங்கு உண்டு.


மார்கழி மாதத்தில், கண்ணபிரானை வைத்து, இலக்கியம் நயம் மிகச் சிறப்பாகவும், உவமை- உருவகத்தை நேர்த்தியாகவும், தமிழை அழகுப்படுத்தியிருப்பதை காணும்போது ஆண்டாளின் தமிழ் வளத்தை அறியலாம்