சல்மான்கானுடன் ஒரு செல்ஃபியாவது எடுத்துவிட வேண்டும் என்ற ஆசையில் மொபைலுடன் வலம் வந்த ரசிகர் மீது கோபமடைந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.


சினிமா பிரபலங்களை நேரில் பார்த்தாலே நம்மை அறியாமல் உற்சாகத்தில் துள்ளிக்குதிப்போம்.. அதிலும் பாலிவுட், கோலிவுட் சூப்பர் ஸ்டார்கள் என்றால் சொல்லவா வேண்டும். எப்படியாவது அவர்களுடன் ஒரு புகைப்படம் எடுத்துவிட முடியாத என்ற ஆசை அளப்பெரியதாகவே இருக்கும். அதிலும் தற்போது செல்ஃபி கலாச்சாரங்கள் அதிகரித்துள்ளதால் எப்படியாவது நமக்குப்பிடித்த ஹூரோக்களுடன் செல்ஃபி எடுத்துவிடுவோம் என்று முயற்சிப்போம். ஆனால் சில சமயங்களில் சினிமா பிரபலங்கள் புகைப்படம் எடுக்க ஒப்புக்கொண்டாலும், சில நேரங்களில் அவர்கள் புகைப்படம் எடுக்க விருப்பம் இல்லாமல் இருக்கலாம். அந்த நேரத்தில் நாம் அவர்கள் முன்பு மொபைலை எடுத்துச்சென்றாலே அவர்களை அறியாமல் அந்த செல்போனை தட்டிவிடத்தான் செய்வார்கள். அப்படியொரு சம்பவம் தான் சமீபத்தில் அரங்கேறியுள்ளது.





இந்தி திரையுலகில் முன்னணி நட்சத்திரனமான சல்மான் கானுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. 1988 ஆம் ஆண்டு பீவி ஹோ தோ ஐசி என்ற திரைப்படத்தில் அறிமுகமானாலும் மைனே பியார் கியா என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப்பெற்று தந்தது. இதனைத்தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துவரும் இவர் தற்போது வரவிருக்கும் ஆன்டிம்: தி ஃபைனல் ட்ரூத் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொள்வதற்கு சென்றிருந்தார். அப்போது அங்கு வந்திருந்த ரசிகர் ஒருவர் எப்படியாவது அவருடன் இணைந்து ஒருபுகைப்படம் எடுத்துவிடலாம் என்று நினைப்பில் அவருக்கு அருகில் சென்று செல்போனை அங்கும் இங்குமாக திருப்பி திருப்பி  எடுக்க முயற்சித்தார். இதனை அமைதியாக பார்த்துக்கொண்டிருந்த சல்மான் வேண்டாம் என்று மறுத்தப்போதும், அதனை மீறியும் எடுக்க முயற்சித்தார். இதனையடுத்து சல்மான் கான் கோபமடையவே ரசிகர் அங்கிருந்து சென்றுவிடுவார். இந்த வீடியோ இன்ஸ்டாவில் பதிவிட்டதையடுத்து இதுவரை சுமார் 3 லட்சத்திற்கு அதிகமான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.


 






இதோடு பல்வேறு கேளிக்கையான இமோஜிகளையும், கருத்துக்களையும் நெட்டிசன்கள் பதிவிட்டுவருகின்றனர். ஏற்கனவே கோவா விமானநிலையத்தில் செல்ஃபி எடுக்க வந்த ரசிகரின் செல்போனை சல்மான் கான் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்குள் ரசிகர்கள் மீது கோபமடைந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் தமிழில் சிவக்குமார் போன்று இந்தியில் சல்மான் கான் என பலரும் கருத்துகளைப் பதிவிட்டுவருகின்றனர்.