Keerthi Suresh | கீர்த்தி சுரேஷை துரத்தும் தங்கை கதாபாத்திரம்.. குழப்பும் நண்பர்கள்.. அப்செட்டில் கீர்த்தி!?

அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான வேதாளம் திரைப்படத்தின் ரீமேக்கில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Continues below advertisement

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் தீபாவளிக்கு வெளியான படம் அண்ணாத்த. சிறுத்தை சிவா இயக்கியிருந்த இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா, சூரி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. ரஜினி ரசிகர்கள் சில பேருக்கு இந்தப் படம் பிடித்திருந்தாலும் பெரும்பான்மையான மக்களுக்கு படம் பிடிக்க வில்லை என்பதை அண்ணாத்த படத்தின் முதல் காட்சி முடிந்ததும் தெரிந்தது. 

Continues below advertisement

படத்தின் கதையில் புதிதாக எதுவுமில்லை. சிவா தனது முந்தைய படமான விஸ்வாசத்திலிருந்து கொஞ்சம், திருப்பாச்சி திரைப்படத்திலிருந்து கொஞ்சம் எடுத்து கதையை உருவாக்கியிருக்கிறார். கீர்த்தி சுரேஷூக்கும், ரஜினிக்குமான பாசப் பிணைப்பு ஒர்க் அவுட் ஆக வில்லை.

திரைக்கதையிலும் எந்தப் புதுமையும் இல்லை. இது மிக மிக பழமையான கதை. காமெடி என்ற பெயரில் எதையோ செய்துவைத்திருக்கிறார்கள். ரஜினி கொடுத்த வாய்ப்பை முருகதாஸைத் தொடர்ந்து சிவாவும் வீணடித்துவிட்டார் போன்ற விமர்சனங்ளை சமூகவலைதளங்களில் காண  முடிந்தது. 





இதனால் இயக்குநர் மற்றும் தயாரிப்பு தரப்பு கடும் அப்செட் என கோலிவுட்டில் பேச்சு அடிபட்டது. அதே நேரம் நெகட்டிவ் விமர்சனங்கள் எதுவும் படத்தின் வசூலை பாதிக்காது என்றும் சிலர் கூறி வருகின்றனர். இந்நிலையில் தீபாவளியன்று வெளியான படங்களில் அண்ணாத்த படம் முதல் நாளில் அதிகம் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியானது. அதுமட்டுமின்றி 2021ஆம் ஆண்டில் நவம்பவர் நான்காம் தேதிவரை வெளியான இந்திய படங்களிலேயே அண்ணாத்த படம்தான் முதல் நாளில் அதிகம் வசூலித்துள்ளது எனவும்,  முதல் நாள் அப்படம்  முதல் நாளில்மொத்தம் 70 கோடி ரூபாயையும், தமிழ்நாட்டில் மட்டும் 34 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகவும் கூறப்பட்டது. 


இந்த நிலையில் சிவாவுடன் கீர்த்தி சுரேஷ் மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆம், முன்னதாக சிவா அஜித்தை வைத்து வேதாளம் என்ற படத்தை இயக்கி இருந்தார். அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து உருவான இந்தப் படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் லட்சுமி மேனன் நடித்திருந்தார். இந்தப் படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆக இருக்கிறது. இந்தப் படத்தில் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கக் கூடிய சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கிறார். இந்த ரீமேக்கில் தங்கையாக நடிக்க கீர்த்தி சுரேஷூக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்தத்தகவலை கேட்ட கீர்த்திசுரேஷின் நலம் விரும்பிகள் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ள வேண்டாம் எனவும் மீறி நடித்தால் லட்சுமி மேனன் போல காணாமல் போய் விடுவாய் என்று எச்சரிக்கை விடுத்ததாக தெரிகிறது. இருப்பினும் கீர்த்தி சுரேஷ் எதை பற்றியும் கவலை கொள்ளாமல் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு விட்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Continues below advertisement