நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் செல்ஃபி எடுக்க வந்த ரசிகர் ஒருவரை அவரது பாடிகார்டு பிடித்து வலுகட்டாயமாக ஓரமாக தள்ளிவிட்ட வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.


எப்போதும் தனது ரசிகர்களுடன் மிக உற்சாகமாக உரையாடுபவர் ராஷ்மிகா. எந்த திரைப்பட விழாவாக இருந்தாலும் ஏதாவது ஒன்றை செய்து ரசிகர்களிடம் பாராட்டுக்களை பெற்றுவிடுவார். ஆனால் இப்போது தனது பாடிகார்டு செய்த ஒரு சின்ன செயலால் ரசிகர்களுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தவித்து வருகிறார்.


நடிகர் விஜய் தேவரகொண்டாவின் சகோதரர் ஆன் அனந்த் தேவர்கொண்டா மற்றும் வைஷ்ணவி சைதன்யா ஆகியோர் நடித்திருக்கும் படம் பேபி. இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்வு நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. நடிகர் ராஷ்மிகா சிறப்பு விருந்தினராக இந்த நிகழ்வில் கலந்துகொண்டார். நிகழ்வு முடிந்து ராஷ்மிகா திரும்பிச்செல்லும் வழியில் ரசிகர்கள் அவரை சூழ்ந்துகொண்டனர். அப்போது ரசிகர் ஒருவர் அவருடன் செல்ஃபி எடுக்க முயன்றபோது ராஷ்மிகாவின் பாடிகார்டு ஒருவர் அவரை வலுக்கட்டாயமாக இழுத்து ஓரமாக தள்ளிவிட்டார். இதனை பார்த்த ராஷ்மிகா அவரிடம் பதற்றமாக ஏதோ சொல்கிறார். பின்பு ஒரு பெண் அவருடன் புகைப்படம் எடுக்க அவரது பின்னால் வந்துகொண்டிருப்பதை கவனித்த ராஷ்மிகா அவசர அவசரமாக ஃபோட்டோ எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.


ராஷ்மிகாவின் பாடிகார்டு செய்த இந்த செயல் ரசிகர்களால் சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.  இது குறித்து ராஷ்மிகா தனது தரப்பில் என்ன பதில் சொல்லப்போகிறார் என்பது அனைவராலும் ஆவலாக எதிர்பார்க்கப்படுகிறது. ”பிரபலங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது உங்கள் வாழ்க்கையை எந்த வகையில் மாற்றுகிறது என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை” என்று ரசிகர்களை விமர்சித்திருந்தார்.






ராஷ்மிகா கடைசியாக நடித்து வெளிவந்தப் படம் மிஷன் மஜ்னு.இந்தப் படத்தில் சித்தார்த் மல்ஹோத்ராவிற்கு இணையாக நடித்திருந்தார் ராஷ்மிகா. ராஷ்மிகா தற்போது ரெய்ன்போ என்னும் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் அனிமல் திரைப்படத்திலும் ரன்பீர் கபூருடன் இணைந்து நடித்திருக்கிறார் ராஷ்மிகா.இவற்றை எல்லாம் கடந்து ரசிகர்கள் ராஷ்மிகாவை மிகவும் ஆவலாக எதிர்பார்க்கும் திரைப்படம் என்றால் அது அல்லு அர்ஜுனுடன் நடிக்கும் புஷ்பா இரண்டாம் பாகம்தான்.


இந்தப் படத்தில் ராஷ்மிகா நடித்த ஸ்ரீவல்லி கதாபாத்திரம் ரசிகர்களின் மனதை கவர்ந்த கதாபாத்திரமாக மாறியுள்ளது. அண்மையில் புஷ்பா இரண்டாம் பாகத்தின் டீஸர் வெளியிடப்பட்டது. முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் சுகுமாறன் இந்த படத்தையும் இயக்குகிறார். இவ்வளவு குறைந்த காலத்தில் இவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட ராஷ்மிகா அவரது ரசிகர்களை கவனமாக  நடத்தவேண்டும் என்பது  நெட்டிசன்களின் கருத்தாக இருக்கிறது.