தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல், ஈரோடு மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, ஆங்காங்கே மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


18.05.2023 முதல் 21.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை: (செண்டிமீட்டரில்)


அமராவதி அணை (திருப்பூர் மாவட்டம்) 3, சூலூர் (கோவை மாவட்டம்), சூளகிரி (கிருஷ்ணகிரி மாவட்டம்), வால்பாறை (கோவை மாவட்டம்), சின்னார் அணை (கிருஷ்ணகிரி மாவட்டம்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை மாவட்டம்), பாப்பிரெட்டிப்பட்டி (தருமபுரி மாவட்டம்) தலா 2, கிளென்மோர்கன் (நீலகிரி மாவட்டம்), சின்னக்களார் (கோயம்புத்தூர் மாவட்டம்), பல்லடம் (திருப்பூர் மாவட்டம்), பெரியநாயக்கன்பாளையம் (கோவை மாவட்டம்), ஏற்காடு (சேலம் மாவட்டம்), கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்), கெட்டி (நீலகிரி மாவட்டம்), கோவை விமான நிலையம் (கோயம்புத்தூர் மாவட்டம்), சின்கோனா (கோயம்புத்தூர் மாவட்டம்), ஓசூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்), பழனி (திண்டுக்கல் மாவட்டம்), கங்கவல்லி (சேலம் மாவட்டம்), பார்வூட் (நீலகிரி மாவட்டம்) தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.


தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் பிற மாவட்டங்களில் வெயில் மண்டையை பிளக்கிறது. குறிப்பாக கடந்த 3 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. சென்னையில் நேற்று முன் தினம் சென்னையில் 42.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. 2017 ஆம் ஆண்டிற்கு பின் பதிவான அதிகபட்ச வெப்பநிலை இதுவே ஆகும்.


இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 4  டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது  வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் என்பதால் மக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 39.4 டிகிரி செல்சியஸ் பதிவானது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வேலூரில் 41.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. அதனை தொடர்ந்து, திருத்தணியில் 41.5 டிகிரி செல்சியஸ், கரூர் பரமத்தியில் 41 டிகிரி செல்சியஸ், பரங்கிப்பேட்டையில் 40.7 டிகிரி செல்சியஸ், மதுரையில் 40.4 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 39.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.


TN Weather Update: இன்று 11 மாவட்டங்களில் பொளக்கப்போகும் வெயில்.. 105 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாகும்.. எச்சரிக்கை கொடுத்த வெதர்மேன்..