நடிகர் அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு துவங்கி வருடமாகிவிட்டது, ஆனால் அதில் பல காலமாக எந்த ஒரு பெரிய அப்டேட்டையும் படக்குழுவினர் தரவில்லை. சரி தீபாவளிக்கு வந்து விடும், கிறிஸ்துமஸ், பொங்கல் என பண்டிகைகளுக்காவது அப்டேட் வரும் என காத்திருந்து காலம் கழிந்த அஜித் ரசிகர்கள் ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து, வலிமை அப்டேட் என்னாச்சு என அனைவரிடமும் கேட்க துவங்கிவிட்டனர்..
இங்கிலாந்தில் இருந்து சென்னைக்கு விளையாட வந்த மொயின் அலி தொடங்கி, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வரை இந்த அப்டேட் கேள்விக்கு தப்பவில்லை. ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத நடிகர் அஜித்தே இதை நிறுத்த அறிக்கை வெளியிடும் நிலைமைக்கு தள்ளப்பட்டார்.
இந்த நிலையில் மீண்டும் ஒரு ரசிகர் தனது ட்விட்டர் பக்கத்தில் அமேசான் ஹெல்ப் டேக் செய்து "வலிமை பிரீமியர் அப்டேட் எப்போது" என கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு பதிலளித்துள்ள அமேசான் "வலிமை குறித்த உங்கள் அக்கறையை நாங்கள் புரிந்து கொள்கிறோம். இதுகுறித்து தற்போது வரை நாங்கள் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. தொடர்ந்து எங்கள் இணையதளத்தில் இணைந்திருங்கள் அடுத்தகட்ட அப்டேட்களுக்காக" என்ன ரிப்ளை செய்துள்ளது.
அவ்ளோதான் அந்த கமெண்டுக்கு சரமாரி ரிப்ளை செய்து வருகின்றனர் அஜித் ரசிகர்கள். இதில் ஒரு பக்கம் #ValimaiOnOTT என வலிமை திரைப்படம் அமேசானில் ரிலீஸ் ஆகப்போவது போன்ற ஹாஷ்டாக்கும் ட்விட்டரில் பதியப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை படக்குழுவோ அல்லது அமேசான் நிறுவனமோ அதை உறுதி செய்யவில்லை. அது ஒரு புரளி என கருது தெரிவித்து சிலர் #ValimaiNotOnOTT எனவும் பதிவுகளை பதிந்து வருகின்றனர்.
ஆக மொத்தம் எப்போதும்போல் எழும் ஒரே கேள்வி "வலிமை அப்டேட் எங்க பாஸ்?"