பிரபல யூ ட்யூபரான மதன் கெளரிக்கு மறைந்த நகைச்சுவை நடிகரான மனோபாலாவிடம் இருந்து Whatsapp குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. இந்த செய்தியைப் பார்த்த மதன் கெளரிக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துவிட்டது என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மதன் கெளரி. யார் அனுப்பியது இந்த குறுஞ்செய்தி.
மதன் கெளரி
யூ டியூப் மூலம் மிகவும் தமிழ்நாட்டு மக்களிடையே மிகவும் பிரபலமானவர் மதன்கெளரி. பல அறியாத தகவல்களை தன்னுடைய யூ டியூப் சேனல் மூலமாக மக்களுக்கு பகிர்ந்தார். 6.6 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை கொண்டுள்ள யூ டியூப் சேனலின் உரிமையாளர் மதன்கௌரிக்கு திரைப்பிரபலங்களை போலவே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
மதன் கெளரி தனது யூடியூப் தளத்தில் பகிரும் தகவல்கள் அனைத்தும் விக்கிப்பீடியா தளத்தில் இருந்து நேரடியாக பகிரப்படுபவை என்கிற விமர்சனங்களும் அவர் மீது வைக்கப்பட்டு வருகின்றன. இந்த விமர்சனங்களைக் கடந்து இந்தியாவின் முக்கியமான சமூக வலைதள பிரபலங்களில் ஒருவராக இருந்து வருகிறார் மதன் கெளரி. கடந்த ஜூலை 13-ஆம் தேதி இவருக்கு மறைந்த நடிகர் இயக்குநரான மனோபாலாவின் எண்ணில் இருந்து ஒரு வாட்ச் அப் குறுஞ்செய்தி வந்துள்ளது. “உங்கள் அனைவரின் ஆதரவும் எங்களுக்குத் தேவை” என இந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
இதனைப் பார்த்த மதன் கெளரி திடுக்கிட்டு தனக்கு ஒரு நொடி ஹார்ட் அட்டாக்கே வந்துவிட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
யார் அனுப்பியது இந்த செய்தி?
இந்த செய்தியை மதன் கெளரிக்கு அனுப்பியது மனோபாலாவின் குழு என்று பின் அவருக்கு தெரியவந்துள்ளது. இந்தப் பதிவை மதன் கெளரி பகிர்ந்ததால் தேவை இல்லாத சர்ச்சை என்று அவரை விமர்சித்து வருகிறார்கள் நெட்டிசன்ஸ். தனது தனிப்பட்ட வாழ்க்கையில் மனோபாலா நகைச்சுவை உணர்வுகள் கொண்ட ஒரு மனிதராகவே இருந்து வந்தார். அவர் இருந்திருந்தால் இந்த நகைச்சுவையை அவர் ரசிக்கவே செய்திருப்பார் என்பது மற்றொரு தரப்பு மக்களின் கருத்தாக இருக்கிறது
மனோபாலா
பிரபல நகைச்சுவை நடிகரும் இயக்குநருமான நடிகர் மனோபாலா கடந்த மே 3-ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தது அவரது ரசிகர்களை பெரும் வருத்தத்தில் ஆழ்த்தியது. தமிழில் ஊர்க்காவலன், பிள்ளை நிலா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள மனோபாலா, 200-க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி, குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
பாரதிராஜாவின் உதவியாளராக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த மனோபாலா, தன் ஒல்லியான தனித்துவ தோற்றத்தையும், தனித்துவமான குரலையும் ப்ளஸ்ஸாக்கி பலரையும் சிரிக்க வைத்தார்.