90களில் மதிமயக்கும் பல பாடல்களில் நடித்து நெஞ்சங்களில் நிறைந்தவர் மோகினி. துள்ளல் பாடல்களில் துவங்கி திரில்லர் பாடல்கள் வரை அவரது பிளே லிஸ்ட் பெரிது. அவற்றில் டாப் 5 உங்கள் பார்வைக்கு.
1.கலகலக்கும் மணியோசை...
‛‛திங்கள் முகம் மங்கை இவள் பக்கம்
தினம் தென்றல் வர முத்தம் தர சொர்க்கம்
மன்னன் இவன் மஞ்சம் தர கொஞ்சும்
அதில் கன்னம் இட கன்னம் மெல்ல கெஞ்சும்
பழகிடவே வந்தாலும் பருகிடவே தந்தாலும்
இதழினிலே ஒரு கவிதை தா
அருகினிலே வந்தாலும் அழகினையே தந்தாலும்
இனிமையிலே ஒரு மனதை தா...
இனி ஒரு பிரிவேது ஓ
தடைகளும் இனி எது
கலகலக்கும் மணியோசை
சலசலக்கும் குயிலோசை
மனதினில் பல கனவுகள் மலரும்’’
இளையராஜா இசையில் ஈரமான ரோஜாவின் அனைத்து பாடல்களும் தித்திக்கும்... அதிலும் இந்த பாடல்... ஐஸ்கிரீம்!
2.வனமெல்லாம் செண்பகப்பூ...
‛‛ஆத்தோரம் பூங்கரும்பு
காத்திருக்கும் சிறு எறும்பு
அக்கறையில் ஆயிரம் பூ பூ பூ
பூத்திருக்கு தாமரைப்பூ
பொன்னிறத்து காஞ்சறம்பூ
புத்தம் புது பூஞ்சிரிப்பு டாப்பு
எப்போதும் மாராப்பு
எடுப்பான பூந்தோப்பு
என்ன என்ன
எங்கும் தித்திப்பூபூ
ஒட்டாத ஊதாப்பூ
உதிராத வீராப்பூ வண்ண
வண்ண இன்பம் ரெட்டிப்பூபூ
வழி முழுதும் வனப்பு
எனக்கழைப்பு
புது தொகுப்பு வகுப்பு
கணக்கெடுப்பு...’’
நாடோடி பாட்டுக்காரன் படத்தில் இசைஞானியின் இசையில் தேனில் மூழ்கிய இன்பம் தரும் பாடல்!
3.ஓஹோ ... காலை குயில்களே...
‛‛ஓஹோ ஹோ காலைக்குயில்களே
கவிதை பாடுதே
கண்ணில் காணும் யாவும்
நெஞ்சில் இன்பமாகும்
பனித்துளியில்
மலர்க்கொடிகள்
குளிக்கிற பொழுதல்லவா
பசுங்கிளிகள்
சிறகடித்ததே
பறக்கிற பொழுதல்லவா
ஓஹோ ஹோ காலைக்குயில்களே
கவிதை பாடுதே....’’
உன்னை வாழ்த்தி பாடுகிறேன் படத்தில் இசைஞானியின் இசையில் மலை மேகங்களுக்கு இடையே ரம்யமான பாடல்!
4.ஏலேலங் கிளியே... எனை தாலாட்டும்...!
‛‛சோலைக் குயில் தேடி என்னைப் பார்க்க வந்துவிடும்
ஒரு பாடல் கேட்டு வரும்
ஆடி வெள்ளம் தேடி வந்து ராகம் சொல்லித் தரும்
எந்தன் ராகம் தீர்த்து விடும்
நானா பாடுற பாட்டு
அந்த தென்றலும் அதைக் கேட்டு
வசந்தம் இன்று பூவில் வரும்
நாளை எந்தன் வாசல் வரும்
வசந்தம் இன்று பூவில் வரும்
நாளை எந்தன் வாசல் வரும்
ஏலேலங்கிளியே என்னைத் தாலாட்டும் இசையே
உன்னைப் பாடாத நாள் இல்லையே
அடிக் கண்ணம்மா பாடாத நாள் இல்லையே...’’
சிற்பியின் இசையில் நான்பேச நினைப்பதெல்லாம் திரைப்படத்தில் பலரின் பேவரிட். எப்போதும் கேட்கலாம்.
5.நான் பாடும் ராகம்...
ஜமீன் கோட்டை படத்தில் சிற்பி இசையில் திகிலூட்டும் காட்சியிலும் ரசிக்கும் படியான இசையில் அமைந்த பாடல். படத்தோடும் சரி, தனியாகவும் சரி, எப்படி கேட்டாலும் இனிமை தரும் ரகம் தான், ‛நான் பாடும் ராகம்... ’ பாடல். வெண்கல குரல் சுவர்ணலதா பாடிய இந்த பாடல் எப்போது கேட்கலாம்.
இது போன்ற இன்னும் பல பாடல்களை மோகினி தந்துள்ளார். என்றும் நெஞ்சில் நிற்கும் அந்த பாடல்களைப் போல அவரும் பல்லாண்டு வாழ அவரது 45 வது பிறந்தநாளில் வாழ்த்துவோம்!
மேலும் படிக்க:
90's கிட்ஸ்களின் கனவுவில் குடியேறிய ஈரமான ரோஜா.. மோகினி பிறந்த நாள் இன்று!