சுமார் 68 ஆண்டுகளாக தபேலா வாசித்து வந்த பிரபல தபேலே இசைக்கலைஞர் தபேலா பிரசாத் நேற்றிரவு காலமானார். இதனால், இசை உலகம் சோகத்தில் உள்ளது. வயது மூப்பின் காரணமாக காலமாண அவருக்கு திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


வடக்கே R.D.பர்மன், சி.ராமசந்திரா, லஷ்மி காந்த் பியாரிலால், நவ்ஷாத், பப்பிலஹரி, தெற்கே திரை இசை திலகம் கே.வி.எம், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி, இசைஞானி இளையராஜா என வலம் வந்து இன்றைய தலைமுறை ரஹ்மான், யுவன், கார்த்திக் ராஜா, ஜி.விபிரகாஷ் என சுமார் 2500 படங்கள், 5க்கும் அதிகமான மொழிகளில்  ஏறக்குறைய 60,000 பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் தபேலா பிரசாத். பாட்டையே தபேலாவில் வாசிக்கும் திறமை வாய்ந்தவர் என இசையமைப்பாளர்களால் பாராட்டப்பட்டவர். 7 வயதில் தபாலே வாசிக்க தொடங்கியவர், கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் தாண்டி தொடர்ந்து இசையமைத்து வந்திருக்கிறார்.


ரஜினி நடிப்பில் மெல்லிசை மன்னர் இசையில் வந்த தில்லு முல்லு, பில்லா படங்களுக்கு தபேலா வாசித்தவர், அதே ரீமேக்காக வெளியானபோது யுவன் இசையில் வந்த தில்லுமுல்லு, பில்லாவுக்கும் தபேலா வாசித்தவர்.


மறைந்த தபேலா பிரசாத்தின் குடும்பமும் இசை பின்னணியைச் சேர்ந்தவர்கள். நவீன இசைக்கருவிகளின் பயன்பாடு அதிகமாகிவிட்டதால், பாரம்பரிய இசைக்கருவிகளின் பயன்பாடு குறைந்துவிட்டதாக ஒரு முறை தபேலா பிரசாத் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், வயது மூப்பிக் காரணமாக காலமான தபேலா பிரசாத்திற்கு இசைக்கலைஞர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.




பட்ஜெட் சம்பந்தமான முக்கியச் செய்திகளை தெரிந்து கொள்ள:






மேலும் படிக்க:15 ஆண்டுகளாக மர்மம் நீடித்து வரும் பாகிஸ்தான் பயிற்சியாளர் பாப் உல்மரின் மரணம்..!






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண